பிரதமர் அலுவலகம்

வர்த்தக ரீதியிலான முதல் பிரத்யேக பிஎஸ்எல்வி-சி51/அமேசானியா-1 திட்டம் வெற்றியடைந்ததற்கு என்எஸ்ஐஎல் மற்றும் இஸ்ரோவுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 28 FEB 2021 1:24PM by PIB Chennai

வர்த்தக ரீதியிலான முதல் பிரத்யேக பிஎஸ்எல்வி-சி51/அமேசானியா-1 திட்டம் வெற்றியடைந்ததற்கு நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) மற்றும் இஸ்ரோவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ வர்த்தக ரீதியிலான  முதல் பிரத்யேக பிஎஸ்எல்வி-சி51/அமேசானியா-1 திட்டம் வெற்றியடைந்ததற்கு என்எஸ்ஐஎல் மற்றும் இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். நாட்டின் விண்வெளி சீர்திருத்தங்களில், இது புது சகாப்தத்தை ஏற்படுத்துகிறது. 4 சிறிய செயற்கை கோள்கள் உட்பட, 18 துணை செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டுள்ளது, நமது இளைஞர்களின் ஆற்றல் மற்றும் புதுமையை வெளிகாட்டுகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.

பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் மூலம் அமேசானியா-1 செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

இது தொடர்பாக பிரதமர் விடுத்துள்ள மற்றொரு சுட்டுரையில், ‘‘ பிரேசில் நாட்டின் அமேசானியா-1 செயற்கை கோள் பிஎஸ்எல்வி-சி51 மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு வாழ்த்துக்கள். நமது விண்வெளி ஒத்துழைப்பில், இது வரலாற்று சிறப்புமிக்க தருணம். பிரேசில் விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுக்கள்’’ என குறிப்பிட்டுள்ளார்.

 

*****(Release ID: 1701510) Visitor Counter : 150