பிரதமர் அலுவலகம்

இரண்டாவது கேலோ இந்தியா தேசிய குளிர்கால விளையாட்டு போட்டிகளில் பிப்ரவரி 26 அன்று பிரதமர் துவக்கவுரை ஆற்ற உள்ளார்

Posted On: 25 FEB 2021 4:55PM by PIB Chennai

இரண்டாவது கேலோ இந்தியா தேசிய குளிர்கால விளையாட்டு போட்டிகளில் 2021 பிப்ரவரி 26 அன்று காலை 11:50 மணி அளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் துவக்கவுரை ஆற்ற உள்ளார்.

2021 பிப்ரவரி 26 முதல் 2021 மார்ச் 2 வரை இப்போட்டிகள் நடக்க உள்ளன. ஜம்மு-காஷ்மீர் விளையாட்டுக் குழு மற்றும் ஜம்மு-காஷ்மீர் குளிர்கால விளையாட்டுகள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இதை நடத்துகிறது. ஆல்பைன் ஸ்கையிங், நார்டிக் ஸ்கை, பனி விளையாட்டு, மலை ஏற்றம், ஐஸ் ஹாக்கி, பனி சறுக்குதல் மற்றும் ஐஸ் ஸ்டாக் உள்ளிட்ட விளையாட்டுகள் நடத்தப்பட உள்ளன.

27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் வாரியங்கள் இப்போட்டிகளில் கலந்துகொள்வதற்காக தங்களது அணிகளை அனுப்புகின்றன.


(Release ID: 1700883) Visitor Counter : 124