பிரதமர் அலுவலகம்

இடையூறு மற்றும் பல்வகைப்படுத்துதல் நமது ஸ்டார்ட் அப்களின் இரண்டு பெரிய யுஎஸ்பிக்கள் ; பிரதமர் மோடி

Posted On: 16 JAN 2021 9:20PM by PIB Chennai

ஸ்டார்ட் அப் உலகின் மிகப் பெரிய தனித்துவ விற்பனை முன்மொழிவு அதன் இடையூறு மற்றும் பல்வகைப்படுத்துதலில் அடங்கியுள்ளது என பிரதமர் கூறிஉள்ளார். பிராரம்ப் ஸ்டார்ட்அப் இந்தியா சர்வதேச உச்சிமாநாட்டில் இன்று காணொளி காட்சி மூலம் அவர் உரையாற்றினார்.

புதிய அணுகுமுறைகள், புதிய தொழில்நுட்பம், புதிய வழிமுறைகள் ஆகியவற்றுக்கு ஸ்டார்ட்அப்கள் முக்கியத்துவம் கொடுப்பதால் இடையூறு ஏற்படுகிறது. சிந்தனை வழிமுறைகள் மாறி வருகின்றன.

 புரட்சியை ஏற்படுத்தும்  பல்வேறு வகையான சிந்தனைகளுடனும், பல்வேறு துறைகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உத்திகளுடனும் ஸ்டார்ட்அப்கள் வருவதால், பல்வகைப்படுத்துதல் ஏற்படுகிறது. பல துறைகளில் அவை புரட்சியை ஏற்படுத்துகின்றன. இந்த சூழலின் மிகப் பெரிய அம்சம், நடைமுறைவாதத்தை விட ஆர்வம் அதிக அளவில் வழி நடத்துவதுதான். செய்ய முடியும் என்ற இந்த எழுச்சி, இன்று இந்தியா செயல்படும் விதத்திற்கு சான்றாகும் என திரு மோடி தெரிவித்தார்.

பிம் யுபிஐ முறை, பணப்பட்டுவாடாவில் புரட்சி ஏற்படுத்தி இருப்பதை பிரதமர் எடுத்துக்காட்டினார். 2020 டிசம்பரில் மட்டும், இந்தியாவில் யுபிஐ மூலம் 4 லட்சம் கோடி அளவுக்கு பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதேபோல, சூரிய சக்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவில், இந்தியா முன்னிலை வகிக்கிறது.

                                     -----



(Release ID: 1689481) Visitor Counter : 88