சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவு

Posted On: 05 NOV 2020 11:52AM by PIB Chennai

கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் போக்கு நிலவுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் கொவிட் தொற்றில் இருந்து குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருதல், உயிரிழப்போரின் விகிதம் குறைவு, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை குறைந்து வரும் போக்கு இந்தியாவில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்தியாவில் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை இன்றைக்கு 5,33,787 ஆக இருக்கிறது. மொத்த தொற்றுப் பாதிப்பில் சிகிச்சை பெற்றுவோரின் எண்ணிக்கை என்பது வெறும் 6.42 % மட்டும்தான்.

மொத்த குணம் அடைந்தோர் 76.5 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள (76,56,478)நிலையில் சிகிச்சை பெறுவோரின் எணிக்கைக்கும், குணம் அடைவோரின் எண்ணிக்கைக்கும் இடையேயான வித்தியாசம் அதிகரித்திருக்கிறது. தேசிய அளவில் குணம் அடைவோர் விகிதம் 92% (92.09%)ஆக சாதனை அளவு எட்டப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 53,357 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 46,253 ஆக இருக்கிறது. நாட்டின் பரிசோதனை எண்ணிக்கை தொடர்ந்து சீராக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு ஒட்டுமொத்த பரிசோதனை 11.3 கோடிக்கு நெருக்கமாக இருக்கிறது. (11,29,98,959). கடந்த 24 மணி நேரத்தில் 12,09,609 பேருக்கு பரிசோதனை நடைபெற்றுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 514 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவின் உயிரிழப்பு விகிதம் 1.49% என்ற அளவில் தொடர்ந்து நீடிக்கிறது.

மேலும் தகவல்களுக்கு கீழ் குறிப்பிட்ட ஆங்கில செய்திக்குறிப்பை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669975

*******


(Release ID: 1670364) Visitor Counter : 247