சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இரண்டாவது நாளாக இந்தியாவில் கொரோனோவால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்திற்கும் குறைவாக பதிவு; 70 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்
प्रविष्टि तिथि:
24 OCT 2020 11:36AM by PIB Chennai
இந்தியாவில் கொரோனா நோய் தொற்றினால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகின்றது. தற்போது 7 லட்சத்திற்கும் குறைவாக 6,80,680 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இது நாட்டின் மொத்த பாதிப்பில் 8.71 சதவீதமாகும்.
மத்திய அரசின் வியூகத்தின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பரிசோதனைகள், சிகிச்சை முறைகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றினால், நாள்தோறும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.
இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டி, 7,16,046 ஆக உள்ளது. நாட்டில் குணமடைந்தோரின் விகிதமும் 89.78% ஆக முன்னேறியுள்ளது.
நாட்டின் மொத்த குணமடைந்தோரில் 61 சதவீதத்தினர் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, டில்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் 67,549 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 53,370 பேருக்கு புதிதாக நோய்தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 650 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் :https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667259
-----
(रिलीज़ आईडी: 1667295)
आगंतुक पटल : 209
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam