பிரதமர் அலுவலகம்

மேன்மைமிகு ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜபெர் அல்-சபாவுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 09 OCT 2020 6:00PM by PIB Chennai

குவைத்தின் அமீராக பொறுப்பேற்றுக்கொண்ட மேன்மைமிகு ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜபெர் அல்-சபாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றுக்கொண்ட மேன்மைமிகு ஷேக் மிஷால் அல்-அகமது அல்-ஜபெர் அல்-சபாவுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 "குவைத்தின் அமீராக பொறுப்பேற்றுக்கொண்ட மேன்மைமிகு ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜபெர் அல்-சபா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றுக்கொண்ட மேன்மைமிகு ஷேக் மிஷால் அல்-அகமது அல்-ஜபெர் அல்-சபா அவர்களையும் நான் வாழ்த்துகிறேன்.

இவர்களது தலைமையின் கீழ் முக்கிய சர்வதேச பங்களிப்பை குவைத் அரசு தொடர்ந்து அளிக்கும் என்றும்இந்தியா-குவைத் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க நட்பு இன்னும் வலுவடையும் என்றும் நான் நம்புகிறேன்," என்று பிரதமர் கூறியுள்ளார்.

-----



(Release ID: 1663382) Visitor Counter : 111