சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தொடர்ச்சியாக 13வது நாளாக, 10 லட்சத்துக்கும் குறைவானோருக்கு கொவிட் சிகிச்சை

प्रविष्टि तिथि: 04 OCT 2020 11:14AM by PIB Chennai

நாட்டில் தொடர்ந்து  13 நாளாக, 10 லட்சத்துக்கும் குறைவானோர் கொவிட் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இன்று கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை  9,37,625.  நேற்றைய எண்ணிக்கையை விட 7,371 பேர் குறைவு.

வார இறுதி நாட்கள் விடுமுறையாக இருந்தாலும், கடந்த வியாழன், வெள்ளி, சனி  ஆகிய நாட்களில் முறையே, 10,97,947, 11,32,675 மற்றும் 11,42,131 பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டன. 

நாட்டின் தினசரி பரிசோதனையில் அதிவேக உயர்வு ஏற்பட்டுள்ளது.ஒவ்வொரு நாளும் 15 லட்சத்துக்கும்  மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

தினசரி சராசரியாக 11.5 லட்சம் கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த ஜனவரி மாதம் ஒன்றாக இருந்த பரிசோதனை எண்ணிக்கை, இன்று 7.89 கோடியை கடந்துள்ளது.  சிகிச்சை பெறுபவர்களின் வீதத்தில் ஒரு சரிவு காணப்படுகிறது. நோய் பாதிப்புக்கு ஆளாகும் வீதம் குநை்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கொவிட்-19 தொற்று பரவலை கட்டுப்படுத்துதில், கொவிட்-19 பரிசோதனை சிறந்த உபகாரமாக உள்ளது.  

அதிகளவிலான பரிசோதனை மூலம் நோயாளிகள், விரைவில்  அடையாளம் காணப்பட்டு, முறையாக தனிமைப்படுத்தி, சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், கொவிட்-19 இறப்பு வீதம் குறைந்துள்ளது.  

நாட்டில் குணமடைவோர் வீதம் தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 82,260 பேர்  குணடைந்துள்ளனர்.  அதே நேரத்தில் 75,829 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக சிகிச்சை பெறுபவர்கடை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை இன்று 55 லட்சத்தை கடந்து விட்டது.(55,09,966).  குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம்குணமடைவோர் வீதமும் அதிகரிக்கிறது. தற்போது இந்த அளவு 84.13 %-மாக உள்ளது.

புதிதாக குண்மடைந்தவர்களில் 75.44 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிர மாநிலம், குணமடைவோர் எண்ணிக்கையிலும் முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளது.

நாட்டில் சிகிச்சை பெறுபவர்களில் 77.11%  பேர்.  10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ளனர்.  நாட்டில் சிகிச்சை பெறுபவர்களின் வீதம் 14.32 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 940 பேர்கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

****************


(रिलीज़ आईडी: 1661533) आगंतुक पटल : 212
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Malayalam