மத்திய அமைச்சரவை

இந்தியா, ஜப்பான் இடையே, தரமான ஜவுளிகள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 02 SEP 2020 4:12PM by PIB Chennai

ஜப்பான் நாட்டு சந்தைக்கு ஏற்றவாறு இந்திய ஜவுளிகள் மற்றும் ஆடைகளின் தரத்தை மேம்படுத்துவது, மற்றும் பரிசோதிப்பதற்காக, இந்தியாவின் ஜவுளிகள் ஆணையம் மற்றும் ஜப்பானின் நிசன்கென் தர மதிப்பீடு மையம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக, பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

இதனால், தொழில்நுட்பத் துறைக்கான ஜவுளிகள் மற்றும் துணி வகைகளை இந்தியாவில், பரிசோதிக்கும் பணிகளை, நிசன்கென் தர மதிப்பீடு மையத்தின் சார்பாக ஜவுளிகள் ஆணையம் மேற்கொள்ளும்.

 

***


 


(Release ID: 1650653) Visitor Counter : 225