பிரதமர் அலுவலகம்

திரு.லால்ஜி தண்டன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 21 JUL 2020 11:19AM by PIB Chennai

மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஆளுனர் திரு.லால்ஜி தண்டன் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரு.நரேந்திர மோடி பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், “அரசியல் அமைப்புச் சட்டம் தொடர்பான விவகாரங்களை நன்கறிந்தவர் திரு.தண்டன்” என்று தெரிவித்துள்ளார்.

“சமுதாயத்திற்கு அயராது உழைத்த திரு.லால்ஜி தண்டன், அவரது அரும்பணிகளுக்காக நினைவுகூரப்படுவார். சிறந்த நிர்வாகியாக விளங்கிய அவர், பொது நலத்திற்கு எப்பொழுதும் முக்கியத்துவம் அளித்தார். அவரது மறைவால் துயருற்றேன்” என்று பிரதமர்  கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாயுடனான திரு.தண்டனின் நீண்டகால நட்புறவையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

*****


(रिलीज़ आईडी: 1640128) आगंतुक पटल : 253
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam