பிரதமர் அலுவலகம்

இந்திய வர்த்தக சங்கத்தின் ஆண்டு நிறைவுக் கூட்டம் 2020: பிரதமர் உரை

சுயசார்பு இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்: பிரதமர்

Posted On: 11 JUN 2020 2:37PM by PIB Chennai

இந்திய வர்த்தக சங்கத்தின் 95 ஆவது ஆண்டு நிறைவுக் கூட்டத்தில், இன்று காணொளி மாநாட்டின் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்க உரையாற்றினார்.

 

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக உலகம் முழுமையுடன் இணைந்து, இந்தியா துணிவுடன் போராடி வருகிறது என்று பிரதமர் கூறினார். வெட்டுக்கிளித் தாக்குதல், ஆலங்கட்டி மழை, எண்ணெய்க் கிணறு தீ விபத்துகள், தொடர்ச்சியான சிறுசிறு நிலநடுக்கங்கள், இரண்டு புயல்கள் போன்ற இயற்கைப் பேரிடர்கள் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளையும் தற்போது நாடு எதிர்கொண்டுள்ளது. ஆனால் நாடு இந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் எதிராக ஒற்றுமையுடன் போராடி வருகிறது என்றார்.

 

இது போன்ற கடினமான காலங்கள் இந்தியாவை மேலும் உறுதியானதாக்குகிறது என்று பிரதமர் கூறினார். மனத்திட்பம், மன உறுதி, ஒற்றுமை ஆகியவையே தேசத்தின் வலிமை; இந்த வலிமையைக் கொண்டு அனைத்து நெருக்கடிகளுக்கும் எதிராக நாடு போராடி வருகிறது; எந்த ஒரு நெருக்கடியும், சுயசார்பு இந்தியாவை ஏற்படுத்தும் வகையில், அதை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை நமக்கு அளிக்கிறது.

 

சுயசார்பு இந்தியா

ஆத்ம நிர்பார் பாரத்

 

சுயசார்பு என்பது பல ஆண்டு காலமாக இந்தியாவின் அவாவாக இருந்து வந்துள்ளது என்று பிரதமர் கூறினார். நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்தையும், மாவட்டத்தையும் சுயசார்பு கொண்டதாக உருவாக்குவதற்கு இதுவே தருணம் என்றார் பிரதமர். இந்தியப்பொருளாதாரம் கட்டளை மற்றும் கட்டுப்பாடுமாண்ட் மற்றும் கண்ட்ரோல் என்று இயங்கும் முறையிலிருந்து அகற்றப்பட்டு, “பிளக் அண்ட் பிளே”  “தேவைப்படும் போது இயக்கிக்கொள்ளும் முறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று கூறினார்

 

 

துணிச்சலான முடிவுகள் எடுப்பது, துணிந்து முதலீடுகள் செய்வதற்கான காலம் இது என்று கூறியவர், உலக அளவில் போட்டியிடக் கூடிய உள்நாட்டுப் பொருள் வழங்கு தொடர் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், பழமைவாத அணுகுமுறைகளுக்கான நேரம் இதுவல்ல என்றும் கூறினார். இந்தியா சுயசார்பு அடையவேண்டிய பிரிவுகளையும் அவர் பட்டியலிட்டார்..

 

நாட்டின் கொள்கையிலும், நடைமுறையிலும் சுயசார்பு என்ற இலக்கு மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக இருந்து வந்துள்ளது. தற்போது இதை விரைவுபடுத்த வேண்டும் என்பதை கொரோனா பெருந்தொற்று, நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்தப் பாடத்திலிருந்து தான் ஆத்ம நிர்பார் பாரத் - சுயசார்பு இந்தியா இயக்கம் தோன்றியுள்ளது என்று அவர் கூறினார்.

 

 

தற்போது இறக்குமதி செய்யப்படும் கட்டாயத்தில் உள்ள அனைத்து பொருள்களையும் ஏற்றுமதி செய்யக்கூடிய நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு, நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று திரு மோடி கூறினார். சிறு வணிகர்களின் முயற்சிகளைப் பாராட்டிப் பேசிய அவர், உள்ளூர் தயாரிப்புகளை அவர்களிடமிருந்து நாம் வாங்கும் போது அவர்களுடைய பொருள்களுக்கும் சேவைகளுக்கும் மட்டுமல்லாமல் அவர்களுடைய பங்களிப்பைப் பாராட்டிப் பரிசளிப்பதாக அது அமைகிறது என்றார்.

 

சுவாமி விவேகானந்தரின் கூற்றுப்படி இந்தியர்கள் அனைவரும் இந்தியத் தயாரிப்புகளையே பயன்படுத்த வேண்டும். இந்தியத் தயாரிப்புகளை பிற நாடுகளில் சந்தைப்படுத்த வேண்டும் என்று இந்தியர்களை ஊக்குவிப்பதே இதற்கான எளிய வழிமுறை என்று அவர் கூறினார். சுவாமி விவேகானந்தர் காட்டிய வழியிலிருந்து ஊக்கம் பெற்று, கோவிட்டுக்குப் பிந்தைய உலகில், அவ்வழியில் இந்தியா செல்ல வேண்டும் என்றார் பிரதமர்.

 

சுயசார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான வரையறையை விரிவுபடுத்தியது, எம்எஸ்எம்இக்களுக்கு ஆதரவளிப்பதற்காக சிறப்பு நிதியங்கள் ஏற்பாடு செய்தது, IBC ஐபிசி தொடர்பான முடிவுகள், முதலீடுகளை செய்வதற்கான தடங்களை கண்டறிவதற்காக திட்ட வளர்ச்சிக் குழுக்களை உருவாக்கியது போன்ற முக்கிய சீர்திருத்தங்களையும் பிரதமர் பட்டியலிட்டார்


 

ஏ பி எம் சி சட்டத்தில் சட்டத்திருத்தம்

வேளாண்துறையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை முடிவுகள் குறித்துப் பேசிய பிரதமர், பல ஆண்டுகளாக கட்டுப்படுத்தி வைத்திருந்த தளைகளிலிருந்து வேளாண் பொருளாதாரம் விடுவிக்கப்பட்டுள்ளது என்றார். இப்போது இந்திய விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருள்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்கும் உரிமை பெற்றுள்ளனர் என்றார்

 

உள்ளூர் உற்பத்திக்காக தற்போது அரசு மேற்கொண்டு இருக்கின்ற தொழில் தொகுப்பு என்ற அணுகுமுறையானது அனைவருக்குமான வாய்ப்பை வழங்கும் என்று பிரதம மந்திரி மேலும் தெரிவித்தார்.  இவற்றோடு தொடர்புடைய தொழில் தொகுப்புகள் அவை ஏற்கனவே உருவான மாவட்டங்கள், ஒன்றியங்கள் நிலையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.  ”இதனோடு சேர்த்து மூங்கில் மற்றும் இயற்கை விவசாயப் பொருள்களுக்கான தொழில்தொகுப்புகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்.  சிக்கிமைப் போன்று ஒட்டுமொத்த வடகிழக்குப் பிராந்தியமும் இயற்கை விவசாயத்திற்கான மிகப்பெரும் மையமாக மாறவேண்டும் என்றும் பிரதமர் கூறினார். இயற்கை விவசாயத்திற்கு சர்வதேச அடையாளம் கிடைத்தால் வடகிழக்குப் பிராந்தியத்தில் இயற்கை விவசாயம் ஒரு மிகப்பெரும் இயக்கமாக மாறுவதோடு சர்வதேச சந்தையில் முன்னணியிலும் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

மக்கள், பூமி மற்றும் லாபம் ஆகியவை ஒன்றுக்கொன்று பிணைந்துள்ளன

உற்பத்தித் துறையில் வங்காளம் வகித்து வந்த வரலாற்று ரீதியான முதலிடத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று பிரதம மந்திரி கேட்டுக்கொண்டார்.  ”வங்காளம் இன்று என்ன நினைக்கிறதோ, அதையே இந்தியா நாளை நினைக்கும்” என்ற வாசகத்தை உந்துதலாக எடுத்துக்கொண்டு தொழில்துறை முன்னேற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.  மக்கள், பூமி மற்றும் லாபம் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப்பிணைந்து ஒரே நேரத்தில் செழிப்படைந்து இணையாக இருக்கமுடியும்.  ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த விலையோடு ஒப்பிட எல்.ஈ.டி விளக்குகளின் விலை இப்போது குறைவாக இருப்பதை ஒரு உதாரணமாக எடுத்துக்காட்டிய பிரதமர் தற்போது ஒவ்வொரு ஆண்டும் மின்சாரக் கட்டணத்தில் சுமார் ரூ.19,000 கோடி சேமிக்கப்படுவதையும், அதாவது மக்களுக்கும் பூமிக்கும் ஒரு சேர லாபம் கிடைத்துள்ளது என சுட்டிக்காட்டினார்.  கடந்த 5-6 ஆண்டுகளில் அரசாங்கத்தின் பிற திட்டங்கள், முடிவுகள் அனைத்துமே மக்கள் பூமி மற்றும் லாபம் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன என்று அவர் கூறினார்.  நீர்வழிப் போக்குவரத்தை பயன்படுத்துவதால் மக்களுக்கு கிடைக்கக் கூடிய லாபங்களைச் சுட்டிக் காட்டிய பிரதமர் இது எவ்வாறு போக்குவரத்து செலவுகளைக் குறைக்கிறது என்றும், குறைவான எரிபொருள் பயன்பாட்டால் பூமி எவ்வாறு பலன் அடைகிறது என்றும் விளக்கி உரைத்தார்.

மக்களை மையமாகக் கொண்ட, மக்களுக்காக இயக்கப்படுகின்ற மற்றும் பூமிக்குச் சாதகமான வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்ட அணுகுமுறை

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுகின்ற இயக்கத்தை அவர் மற்றொரு உதாரணமாக எடுத்துக்காட்டினார்.  இது மேற்குவங்கம் சணல் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு உதவும் இயக்கமாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.  இந்த வாய்ப்பை தொழில்துறை மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.  மக்களை மையமாகக் கொண்ட, மக்களுக்காக இயக்கப்படுகின்ற மற்றும் பூமிக்குச் சாதகமான வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்ட அணுகுமுறை தான் தற்போது நாட்டின் அரசாட்சியின் ஒரு அங்கமாக மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.  ”நமது தொழில்நுட்ப முன்னெடுப்புகள் அனைத்தும் மக்கள், பூமி மற்றும் லாபம் என்ற கருத்தாக்கத்தோடு ஒத்திசைந்ததாகவே உள்ளன”.

ரூபே கார்டு மற்றும் யுபிஐ

தற்போது தொடுதல், தொடர்பு கொள்ளுதல் மற்றும் ரொக்கப்பணம் கையாளுதல் ஆகியவை தேவை இல்லாத சேவையாகவும் யுபிஐ மூலம் 24 x 7 நேரமும் செயல்படும் வகையில் வங்கிச்சேவைகள் மாறியுள்ளன என்றும் பிரதம மந்திரி குறிப்பிட்டார்.  பீம் செயலி மூலமான பணப்பரிமாற்றங்கள் தற்போது புதிய சாதனைகளை ஏற்படுத்தியுள்ளன.   ரூபே கார்டு தற்போது ஏழைகள், விவசாயிகள், மத்தியதர வர்க்கத்தினர் மற்றும் நாட்டின் ஒவ்வொரு பிரிவினரும் விரும்புகின்ற அட்டையாக மாறியுள்ளது.  சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு ரூபே அட்டைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதம மந்திரி வலியுறுத்தினார்.  நாட்டில் வங்கிச் சேவைகள் இப்போது அனைத்து தரப்பு மக்களையும்  சென்று சேர்ந்துள்ளது.  நேரடிப் பணப்பரிமாற்றம், ஜேஏஎம் (ஜன்தன், ஆதார், மொபைல்) ஆகியவற்றின் மூலமாக எந்த இழப்பும் இல்லாமல் கோடிக்கணக்கான பயனாளிகளுக்கு நிதிச்சேவைகளை வழங்குவது சாத்தியமாகி உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.  சிறிய அளவில் செயல்படும் சுயஉதவிக் குழுக்கள், சிறு, குறு, நடுத்தரத்தொழில்கள் தங்களின் உற்பத்திப் பொருள்களையும், சேவைகளையும் நேரடியாக இந்திய அரசாங்கத்திற்கு ஜெம் பிளாட்ஃபார்ம் மூலம் வழங்குவதில் எவ்வாறு பயன் அடைந்துள்ளன என்றும் பிரதமர் எடுத்துக்காட்டினார். 

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் முதலீடு செய்யுமாறு தொழிற்பிரிவினரை அவர் வலியுறுத்தினார்.  நாட்டில் சோலார் பேனலின் மின்ஆற்றல் சேமிப்புத் திறனை அதிகரிப்பதற்கான சிறந்த பேட்டரிகளைத் தயாரிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.  மேலும் இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில்களையும் அது போன்ற நிறுவனங்களையும் அரவணைக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

தாகூரின் புகழ் பெற்ற “நூதன் ஜுகர் போரே” கவிதையை மேற்கோள் காட்டிய பிரதம மந்திரி தற்போதைய நெருக்கடியான சவால் மிகுந்த காலகட்டத்தில் கிடைக்கக் கூடிய வாய்ப்புகளைப் புரிந்து கொள்ளுமாறு தொழிற்பிரிவினரைக் கேட்டுக் கொண்டார்.  நடப்பதற்கு காலை எடுத்து வைத்தால் தான் ஒரு புதிய பாதையை உருவாக்க முடியும். அதனால் தற்போது எந்தவிதமான தாமதமும் இருக்கக் கூடாது என்றும் பிரதமர் தெரிவித்தார். 

கிழக்கிந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியாவில் தொழிற்சாலை மேம்பாட்டுக்காக ஐசிசி ஆற்றிய பங்களிப்பையும் பிரதமர் பாராட்டினார்.

********



(Release ID: 1630889) Visitor Counter : 247