பிரதமர் அலுவலகம்

திருவிழாக்களுக்கு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

Posted On: 14 APR 2020 10:20AM by PIB Chennai

நாட்டில் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படும் நிலையில், மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

``பல்வேறு விழாக்களைக் கொண்டாடும் இந்திய மக்களுக்கு வாழ்த்துக்கள். இந்த விழாக்கள் இந்தியாவில் சகோதரத்துவ எண்ணத்தை இன்னும் உறுதிப்படுத்தட்டும். இந்த விழாக்கள் ஆனந்தம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டு வரட்டும். வரக்கூடிய நாட்களில் கோவிட்-19 பிரச்சினைக்கு எதிராக, கூட்டாகப் போராடுவதற்கு அதிக பலம் நமக்கு கிடைக்கட்டும்.

போஹேலா பைஷாக் நல்வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு அற்புதமானதாக அமையட்டும், எல்லோரும் ஆரோக்கியமும் வளமையும் பெறும் ஆண்டாக அமையட்டும்.

அனைவருக்கு மகிழ்ச்சிகரமான விஷு வாழ்த்துக்கள்! புத்தாண்டு என்பது புதிய நம்பிக்கை மற்றும் புதிய சக்தியை கொண்டு வரக் கூடியது. வரக் கூடிய ஆண்டு எல்லோருடைய வாழ்விலும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நலன்களை உருவாக்கட்டும்.

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆனந்தம் நிறைந்த, அற்புதமான ஆரோக்கியம் நிறைந்த ஆண்டாக அமைய பிரார்த்திக்கிறேன்.

போஹாக் பிஹூ புனித தினத்தை ஒட்டி நல்வாழ்த்துக்கள்'' என்று டுவிட்டர்  மூலம் பிரதமர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், “அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன். எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும்.”  என்று பிரதமர் தமிழில் பதிவிட்டுள்ளார்.



(Release ID: 1614241) Visitor Counter : 99