தேர்தல் ஆணையம்

தலைமை தேர்தல் ஆணையர் & தேர்தல் ஆணையர்கள் கொவிட் நிதியுதவிக்கு பங்களிக்க தேர்தல் ஆணையத்திலிருந்து தாங்கள் பெறும் அடிப்படை ஊதியத்தின் முப்பது சதவீதத்தை ஒரு வருடத்திற்கு தாமாக முன் வந்து குறைத்துக் கொண்டுள்ளனர்

Posted On: 13 APR 2020 12:18PM by PIB Chennai

தற்போது ​​நம் நாடு, உலகின் பிற பகுதிகளைப் போலவே, கொவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றுநோயின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், பொது சுகாதாரத்திலும், தேசிய பொருளாதாரத்திலும் அதன் தாக்கத்தைக் குறைக்கவும், பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதற்கான மகத்தான பணியில், அரசு மற்ற நிறுவனங்களுடன் இணைந்து ஈடுபட்டுள்ளது. அரசு மற்றும் அரசுசாரா அமைப்புகளால் எடுக்கப்பட்டு வரும்ல்வேறு நடவடிக்கைகளுக்கு அனைத்து மட்டங்களில் இருந்தும் பேருதவி தேவைப்படும் இந்த நிலையில், அரசு வழங்கும் சம்பள சுமையை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் அரசுக்கு உதவியாக இருக்கும்.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் திரு. அசோக் லாவாசா மற்றும் திரு. சுஷில் சந்திரா ஆகியோர் ஆணையம் தமக்கு வழங்கி வரும் அடிப்படை ஊதியத்தின் முப்பது சதவீதத்தை, வரும் 2020 ஏப்ரல் 1 முதல் ஒரு வருட காலம், தானாக முன் வந்து குறைக்க முடிவு செய்துள்ளனர்.

***************


(Release ID: 1613966) Visitor Counter : 206