57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

‘எல்லைகளற்ற கதைகள்’: புவியியல் மற்றும் சமூக-கலாச்சார எல்லைகளைக் கடந்து சினிமாவைக் கொண்டாடும் 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2026 2:09PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2339312Views: 4

57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவையொட்டி, கோவாவின் பனாஜியில் உள்ள பத்திரிக்கை தகவல் அலுவலக ஊடக மையத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. விழா இயக்குநர்
திரு அசுதோஷ் கோவாரிகர் மற்றும் தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் திரு தீரஜ் சிங் ஆகியோர் இதில் பங்கேற்று உரையாற்றினர். விழாவின் அதிகாரப்பூர்வக் கையேடும் வெளியிடப்பட்டது.

புவியியல் எல்லைகளைத் தாண்டி, குடும்பம் மற்றும் சமூகத்தில் நிலவும் சாதி, சமூக வேறுபாடுகளைக் கடந்து மனித அனுபவங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ‘எல்லைகளற்ற கதைகள்’ என்ற மையக்கருத்து அமைந்துள்ளதாகத் திரு கோவாரிகர் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு அனிமேஷன், ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்த திரைப்படங்கள் ஆகிய மூன்று புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது வென்ற ஆவணப்படங்களுக்கான சிறப்புத் திரையிடலும் இடம்பெறுகிறது.

இந்தியன் பனோரமா, பழைய திரைப்படங்களின் மீள்பார்வை உள்ளிட்ட அனைத்துப் பிரிவுப் படங்களையும் பார்வையிட்டு, சுதந்திரமான விமர்சனப் பார்வையுடன் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு ஊடகவியலாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338972&reg=3&lang=1

***

TV/NB/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2339312
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026