உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த 7 ஆண்டுகளில் 36 நாடுகளிலிருந்து 274 தலைமறைவுக் குற்றவாளிகள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்

प्रविष्टि तिथि: 04 AUG 2026 1:15PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில், உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவின் வழிகாட்டுதலில், தலைமறைவுக் குற்றவாளிகளை இந்தியாவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கை ஒரு ‘தேசிய முன்னுரிமையாக’ மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 7 ஆண்டுகளில் (2019 முதல் 2026 வரை) 36 நாடுகளிலிருந்து 274 தலைமறைவுக் குற்றவாளிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

உலகளாவிய செயல்பாடுகள், வலுவான ஒருங்கிணைப்பு, சிறப்பான தூதரக உறவுகள் ஆகிய மூன்று முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டை விட்டுத் தப்பியோடிய குற்றவாளிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த உத்தியை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 2019-ல் தேசிய புலனாய்வு முகமை சட்டத்திருத்தம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, வெளிநாடுகளில் இயங்கும் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கான நிதி ஆதரவு கட்டமைப்புகள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

பிஎன்எஸ்எஸ் பிரிவு 355 மற்றும் 356-ன் கீழ், நாட்டில் முதன்முறையாகத் தலைமறைவுக் குற்றவாளிகள் இல்லாத நிலையிலும் விசாரணை நடத்தும் சிறப்புச் சட்ட விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், 'பாரத்போல்' இணையதளம் மூலம் 1,400-க்கும் மேற்பட்ட முகமைகள் இண்டர்போல் அமைப்புடன் இணைக்கப்பட்டு, தகவல் பரிமாற்றக் காலம் 3 முதல் 10 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. 'திரிசூல்' நடவடிக்கையின் மூலம் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு ஆதாரங்களைப் பயன்படுத்தித் தலைமறைவுக் குற்றவாளிகளின் இருப்பிடங்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டுள்ளன.

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (PMLA) தீவிர அமலாக்கத்தின் மூலம் ரூ.17,874 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதாரக் குற்றவாளிகளிடமிருந்து ரூ.18,762 கோடி மீட்டெடுக்கப்பட்டு உரிய நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294184&reg=3&lang=1

***

VJ/PD/SE/KR

 


(रिलीज़ आईडी: 2294310) आगंतुक पटल : 30