பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் குண்டு எறிதல் எஃப் 57 பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற ஷில்பா கஞ்சுகரகொப்பலு ஷைலாவுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 28 JUL 2026 2:14PM by PIB Chennai

கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் மகளிர் குண்டு எறிதல் எஃப் 57 பிரிவின் இறுதிச் சுற்றில் வெண்கலப்பதக்கம் வென்ற ஷில்பா கஞ்சுகரகொப்பலு ஷைலாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர், ஷில்பாவின் தனிப்பட்ட சிறந்த செயல்பாடு இச்சாதனையை மேலும் சிறப்புக்குரியதாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

அவருடைய சாதனைக்கு திரு மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;

“2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஷில்பா கஞ்சுகரகொப்பலு ஷைலா புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளார்!

மகளிர் குண்டு எறிதல் எஃப் 57 பிரிவின் இறுதிச் சுற்றில் தனிப்பட்ட சிறந்த செயல்பாட்டுடன் வெண்கலப்பதக்கம் வென்ற ஷில்பாவுக்கு வாழ்த்துகள்.  இது உண்மையில் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

**

(Release ID: 2290318

TV/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2290359) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Kannada , Assamese , Odia , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Manipuri , Gujarati , Malayalam