தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியத் திரைப்படத் துறையை மேம்படுத்துவதற்கு இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

प्रविष्टि तिथि: 29 JUN 2026 8:27PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் இரண்டு முக்கிய முடிவுகள்  எடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள், இந்திய திரைப்படத்துறையை மேம்படுத்துவதற்கும், நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவும்.  அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், திரைப்படத் தயாரிப்பு, விநியோகம் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான உடனடி கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

ஆய்வுக் குழு:

திரு பிரசூன் ஜோஷி தலைமையில் ஒரு உயர்மட்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் துறை சார்ந்த நிபுணர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் இடம்பெறுவர்.

இந்தியத் திரைப்படத் துறையின்முன் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்களை இந்தக் குழு ஆய்வு செய்யும். துறையை வலுப்படுத்துவதற்கான வழிகளை குழு பரிந்துரைக்கும். மேலும், இந்தியத் திரைப்படங்களை உலக அளவில் அதிகப் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் பரிந்துரைக்கப்படும்.

இந்த ஆய்வுக் குழு நாடு முழுவதும் உள்ள தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து, மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும்.

மாநிலங்களுக்கான மாதிரித் திரைப்பட ஒழுங்குமுறை விதிகள்:

திரையரங்குகள் மற்றும் திரைப்படம் தொடர்பான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மாநிலப் பட்டியலின் கீழ் வருகின்றன. திரையரங்குகளுக்குத் தேவைப்படும் பல்வேறு அனுமதிகள் தொடர்பாக வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு விதிகளைப் பின்பற்றுகின்றன. இது, குறிப்பாகச் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் திரைப்படக் கட்டமைப்பு வசதிகளின் வளர்ச்சிக்கு ஒரு பெரும் தடையாக இருந்து வருகிறது.

திரைப்படத் துறைக்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், அமைச்சகம் ஒரு மாதிரி விதிமுறைகளைத் தயாரித்துள்ளது. அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்த பின்னரே இந்த விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த 'மாநிலங்களுக்கான மாதிரித் திரைப்பட ஒழுங்குமுறை விதிகளை' அமைச்சகம் இப்போது அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்துமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விதிகளைச் செயல்படுத்த மாநிலங்களுக்கு அமைச்சகம் உதவிகளையும் வழங்கும்.

இந்த இரு முடிவுகளும் இணைந்து, வலுவான, நவீன மற்றும் உலக அளவில் போட்டியிடக்கூடிய இந்தியத் திரைப்படத் துறையை உருவாக்கும். படைப்பாற்றல், கலாச்சாரம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றிற்கான ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக இந்தியத் திரைப்படத் துறை தொடர்ந்து திகழும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279150&reg=48&lang=1

(Release ID: 2279150)

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2279222) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Khasi , Urdu , Marathi , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam