பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்கு ஆசிய சூழலால் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு

இடுகை இடப்பட்ட நாள்: 29 MAY 2026 7:22PM by PIB Chennai

மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவும் நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டத்தில், "மக்கள் பீதியடைந்து எரிபொருட்களைப் பதுக்கவோ அல்லது அதிக அளவில் வாங்கவோ வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 1.80 கோடி சமையல் எரிவா சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளைத் தடுக்க 96% சிலிண்டர்கள் 'டிஏசி முறையிலேயே வழங்கப்படுகின்றன. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் பதுக்கலைத் தடுக்க மாநில அரசுகளுடன் இணைந்து தீவிர சோதனைகள் நடைபெறுகின்றன. கடந்த இரு நாட்களில் மட்டும் 900-க்கும் மேற்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பதுக்கலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை நிலையங்கள் தடையின்றி இயங்குகின்றன.

மேற்கு ஆசியப் பகுதிகளில் உள்ள இந்தியக் கப்பல்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் கொண்டு வரும் 'நிஸோஸ் கெரோஸ்' கப்பல் பாதுகாப்பாக உள்ளது. இது ஜூன் 3ம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

அங்குள்ள இந்தியத் தூதரகங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு, இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றன. வான்வெளிப் போக்குவரத்து ஓரளவு சீராக இருப்பதால், கூடுதல் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266778&reg=3&lang=1


***

TV/VK/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2266829) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Odia , Kannada , Malayalam