பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
உள்நாட்டு சமையல் எரிவாயு உற்பத்தி 28% அதிகரிப்பு; இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் அதிக திறன் பயன்பாட்டில் இயங்குகின்றன: மேற்கு ஆசிய நிலவரம் குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான விளக்கக் கூட்டத்தில் அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAR 2026 7:53PM by PIB Chennai
மேற்கு ஆசியாவில் நிலவும் சூழலுக்கு ஏற்ப இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஊடகங்களுக்கு விளக்கினர். குடிமக்கள் பீதியடைந்து சமையல் எரிவாயுவிற்கு முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வதற்கு இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், தினமும் 50 லட்சம் சிலிண்டர்கள் வழங்கப்படுவதாகவும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் உறுதியளித்தது. நாட்டின் தினசரி எண்ணெய் நுகர்வு 5.5 மில்லியன் பீப்பாய்கள் என்றும், நாட்டில் உள்ள 22 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அதிக திறன் பயன்பாட்டில் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 5 நாட்களில், எல்பிஜி உற்பத்தி 28 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் கொள்முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பீதி காரணமாக முன்பதிவுகளில் பல மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மை நிலவும் இந்தக் காலகட்டத்தில், தேவையற்ற முன்பதிவுகளைத் தவிர்க்குமாறும், அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும், முடிந்தவரை எரிபொருளைச் சேமிக்குமாறும் குடிமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த துறைமுக செயல்பாடுகள் நிலையாக உள்ளன. பங்குதாரர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் காலக்கெடுவுக்குள் குறைகளைத் தீர்ப்பதன் மூலம் கப்பல் போக்குவரத்து மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிக்க அனைத்து பெரிய துறைமுகங்கள்/மாநில கடல்சார் வாரியங்களுக்கும் ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து பெரிய துறைமுகங்களுக்கும் ஒரு முதன்மை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239172®=3&lang=1
(Release ID: 2239172)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2239312)
வருகையாளர் எண்ணிக்கை : 76
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam