ஆயுஷ்
azadi ka amrit mahotsav

சர்வதேச யோகா தினத்துக்கான 100 நாள் கவுண்ட்டவுனின் தொடக்கமாக தில்லியில் யோகா விழாவுக்கு நாளை ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAR 2026 10:27AM by PIB Chennai

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், சர்வதேச யோகா தினத்திற்கான 100 நாள் கவுண்ட்டவுன்  தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் யோகா மஹோத்சவ்-2026 எனப்படும் யோகா விழாவுக்கு தில்லியில் நாளை (மார்ச் 13, 2026)  ஏற்பாடு செய்துள்ளது. ஆயுஷ் அமைச்சகம், யோகா தொடர்பான பல்வேறு தரப்பினருடன் இணைந்து, 100 நாட்கள் கவுண்ட்டவுன் நிகழ்ச்சிகளுக்கான திட்டத்தை வகுத்துள்ளது. இதில் 100 நிறுவனங்கள் 100 இடங்கள்/நகரங்களில் யோகா ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன . இதன் தொடக்கமாக நாளை (மார்ச் 13, 2026) புதுதில்லி விஞ்ஞான் பவனில் காலை 9 மணிக்கு ஒரு பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் உள்பட பல மத்திய அமைச்சர்களும் ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்திய ராஜேஷ் கோடேச்சா, ஆயுஷ் நிபுணர்கள், யோகா ஆர்வலர்கள் கலந்து கொள்வார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் முன்முயற்சியின் பேரில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை 2014-ம் ஆண்டில், ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்தது. நமது கலாச்சார, ஆன்மீக பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ள யோகாவை உலகம் முழுவதும் கொண்டு செல்வது இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விஷயம். சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் முதன்மை அமைச்சகம் ஆயுஷ் அமைச்சகமாகும். ஒவ்வொரு ஆண்டும், இந்த தினத்தின் முக்கிய நிகழ்வு, பிரதமர் தலைமையில் மக்கள் பங்கேற்பு யோகா நிகழ்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு யோகா தின கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே நடைபெற்று வருகின்றன ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் கூறினார்.

சர்வதேச யோகா தினத்திற்கான 100 நாள் கவுண்ட்டவுன் ஒவ்வொரு ஆண்டும் பிரதான கொண்டாட்டத்திற்கு முன்னதாக 100 நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில், நாடு முழுவதும்  யோகாவின் நன்மைகளை  மக்களிடையே கொண்டு செல்லும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

***

(Release ID: 2238717)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2238828) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Gujarati , Telugu , Kannada , Malayalam