நிதி அமைச்சகம்
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ₹10,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி நிதியம் அறிமுகம்
प्रविष्टि तिथि:
01 FEB 2026 1:00PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இன்று (01.02.2026) நாடாளுமன்றத்தில் 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை வளர்ச்சியின் முக்கிய உந்து சக்தியாக அங்கீகரித்து, மூன்று முனை அணுகுமுறையை நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார்.
முதலாவது, பங்கு மூலதன ஆதரவு ஆகும். இதில், எதிர்கால சாதனைகளை உருவாக்கும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலான, ரூ. 10,000 கோடி மதிப்பில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான பிரத்யேக வளர்ச்சி நிதியம் அறிமுகப்படுத்தப்படுவதாக நிதி அமைச்சர் அறிவித்தார். 2021-ல் அமைக்கப்பட்ட தற்சார்பு இந்தியா நிதியத்துக்கு ரூ. 2,000 கோடி கூடுதல் நிதி வழங்கியுள்ள அவர், குறு நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இரண்டாவது அணுகுமுறையான நிதி ஆதரவு குறித்துப் பேசிய நிதியமைச்சர், வர்த்தக வரவுகள் மின்னணு திட்ட தளமான டிரெட்ஸ் (TreDS) மூலம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ₹7 லட்சம் கோடி நிதியைப் பெற்றுள்ளதாக் கூறினார். அதில் 4 நடவடிக்கைகளை அவர் முன்மொழிந்தார்:
- பொதுத்துறை நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடமிருந்து செய்யும் அனைத்து கொள்முதல்களுக்கும் டிரெட்ஸ்-ஐ கட்டாய பரிவர்த்தனை தளம் ஆக்குவது.
- டிரெட்ஸ் தளத்தில் கடன் உத்தரவாத ஆதரவு செயல்முறையை அறிமுகப்படுத்துவது;
- குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடமிருந்து அரசின் கொள்முதல் குறித்த தகவல்களை நிதி நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ள அரசு மின் சந்தைத் தளத்தை டிரெட்ஸ்- இணைப்பது.
- டிரெட்ஸ் மூலம் பெறப்பட வேண்டிய தொகைகளை சொத்து ஆதரவுப் பத்திரங்களாக அறிமுகப்படுத்துவது. இது ஒரு இரண்டாம் நிலை சந்தையை உருவாக்க உதவுவதுடன், பணப்புழக்கத்தையும் மேம்படுத்தும்.
மூன்றாவதாக, இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில், பட்டயக் கணக்காளர் நிறுவனம் போன்ற பல்வேறு தொழில்முறை நிறுவனங்கள் மூலமாக குறுகிய கால பயிற்சிப் படிப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், இதன் மூலம் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் இணக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த வல்லுநர்கள் உதவுவார்கள் என்றும் நிதி அமைச்சர் அறிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221434®=3&lang=1
***
VJ/PKV/PLM/SH
(रिलीज़ आईडी: 2221705)
आगंतुक पटल : 11