நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உட்கட்டமைப்பில் தனியார் முதலீட்டில் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது

प्रविष्टि तिथि: 29 JAN 2026 2:10PM by PIB Chennai

இந்தியாவின் வளர்ச்சியில் உள்கட்டமைப்பு தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. பொது மூலதனச் செலவு, 2015-ம் ஆண்டு முதல் தொடர்ந்து முன்னோக்கிச் செல்கிறது. பிரதமரின் கதிசக்தி மூலம் பன்முகத் திட்டமிடல் வலுவடைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025-26-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் மூலதனச் செலவு கிட்டத்தட்ட 4.2 மடங்கு அதிகரித்துள்ளது. இது 2018-ம் நிதியாண்டில் 2.63 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2026-ம் நிதியாண்டில் இது 11.21 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரங்களில் உள்கட்டமைப்பில் தனியார் முதலீட்டைப் பொறுத்தவரை உலக அளவில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவை உலக வங்கி தரவரிசைப்படுத்தியுள்ளது என்று 2025-26-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் பொது- தனியார் கூட்டு முதலீட்டில் மிகப்பெரிய நாடாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு கணிசமாக விரிவடைந்துள்ளது.  தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பு 2014-ம் நிதியாண்டில் 91,287 கிலோ மீட்டரில் இருந்து தற்போது  1,46,572 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. இது 60 சதவீத வளர்ச்சி ஆகும்.

 

2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, ரயில்வே உள்கட்டமைப்பு தொடர்ந்து விரிவடைந்து வருவதாகவும், மார்ச் 2025 நிலவரப்படி ரயில் கட்டமைப்பு, 69,439 வழித்தட கிலோ மீட்டரை எட்டியுள்ளதாகவும், இதில் 99.1 சதவீத மின்மயமாக்கல் எட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தியா உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானச் சந்தையாக உருவெடுத்துள்ளது. 2014-ல் 74 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 2025-ல் 164 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219991&reg=3&lang=1

**

(Release ID: 2219991)

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2220685) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam