நிதி அமைச்சகம்
எதிர்காலத்திற்குத் தயாராகும் வகையில் நாட்டில் திறன் கட்டமைப்பு வலுப்படுத்தப்படுகிறது: பொருளாதார ஆய்வறிக்கை
प्रविष्टि तिथि:
29 JAN 2026 1:52PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025-2026-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், நாட்டில் திறன் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறன்களுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கும், தரத்தை மேம்படுத்துவதற்கும் நன்கு ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டுச் சூழல் அமைப்பு தேவைப்படுகிறது. ஆய்வுத் தகவல்களின்படி ஏதேனும் ஒரு வகையான தொழில் அல்லது தொழில்நுட்பப் பயிற்சியைப் பெற்றிருக்கும் இளைஞர்களின் சதவீதம், 2017-18-ல் 8.1 சதவீதத்திலிருந்து 2023-24-ல் 34.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் நேர்மறையான தாக்கத்தை பிரதிபலிக்கிறது.
தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) நிலையில் திறன் கட்டமைப்பு வலுப்படுத்துகிறது. ஐடிஐக்களை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டம், ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவற்றின் மூலம் 1,000 அரசு ஐடிஐ-களை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219938®=3&lang=1
******
(Release ID: 2219938)
TV/PLM/EA
(रिलीज़ आईडी: 2220526)
आगंतुक पटल : 7