பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு மோடி திரு லிப்-பு டானை சந்தித்தார் இந்தியாவின் குறைகடத்திப் பயணத்திற்கான இன்டெல்லின் உறுதிப்பாட்டுக்கு பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 09 DEC 2025 9:11PM by PIB Chennai

தொழில் அதிபர் திரு லிப்-பு டானை சந்தித்ததில் மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவின் செமிகண்டக்டர் பயணத்திற்கான இன்டெல்லின் உறுதிப்பாட்டை  பாராட்டுவதாக கூறினார்.

இது குறித்த சமூக எக்ஸ் தள பதிவில் பிரதமர் கூறியதாவது:

"திரு லிப்-பு டானை சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்கள் குறைகடத்திப் பயணத்திற்கான இன்டெல்லின் உறுதிப்பாட்டை இந்தியா வரவேற்கிறது. தொழில்நுட்பத்திற்கான புதுமை சார்ந்த எதிர்காலத்தை உருவாக்க எங்கள் இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் இன்டெல்லுக்கு சிறந்த அனுபவம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்." என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

***

(Release ID: 2201159)

SS/VK/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2212414) வருகையாளர் எண்ணிக்கை : 17