உள்துறை அமைச்சகம்
விண்வெளி தொழில்நுட்பத்தில் உலகின் மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்ய வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை நிறைவேற்றப்பட்டு வருகிறது - மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
प्रविष्टि तिथि:
24 DEC 2025 12:22PM by PIB Chennai
எல்விஎம்3-எம்6 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் விண்வெளித் திறனை வர்த்தக ரீதியிலான வெற்றியாக மாற்றுவதில் விஞ்ஞானிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது என்று அவர் கூறினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறியிருப்பதாவது:
“எல்விஎம்3-எம்6 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவிற்கு வாழ்த்துகள். உலகளவில் மேம்பட்ட தகவல் தொடர்பு சேவையை வழங்கவுள்ள அமெரிக்க செயற்கைக்கோளான ப்ளூபேர்ட் பிளாக்-2 வெற்றிகரமாக இன்று விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதன் மூலம், இந்தியாவின் விண்வெளித் திறனை வர்த்தக ரீதியிலான வெற்றியாக மாற்றுவதில் நமது விஞ்ஞானிகளின் திறமையை வெளிப்படுத்துவதாக உள்ளது. இதன் மூலம், விண்வெளி தொழில்நுட்பத்தில், உலகின் மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்ய வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை நிறைவேற்றப்பட்டு வருகிறது. https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208029®=3&lang=1
***
TV/SV/KR
(रिलीज़ आईडी: 2208070)
आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu