தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் ஆகாஷ்வாணி வானொலி நிலையங்கள் 2,539.61 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்படும் – மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்
प्रविष्टि तिथि:
18 DEC 2025 2:06PM by PIB Chennai
தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் ஆகாஷ்வாணி வானொலி நிலையங்கள் 2,539.61 கோடி ரூபாய் செலவில் ஒலிபரப்பு, உள்கட்டமைப்பு மற்றும் வலைதள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில், கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள அவர், தூர்தர்ஷன் மற்றும் ஆகாஷ்வாணி நிகழ்ச்சிகள் பெருமளவிலான நேயர்களைச் சென்றடையச் செய்யும் வகையில், நீடித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இதற்கென 2024-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கையின்படி தரமான மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளுடன் ஒலிபரப்பு சேவைகள் மேம்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். பெருமளவிலான மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் தேசிய அளவிலான முக்கிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நேரடியாக ஒலிபரப்பப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா, மும்பையில் நடைபெற்ற வேவ்ஸ் உச்சிமாநாடு, இஸ்ரோவின் செயற்கைக் கோள் செலுத்தும் நிகழ்வுகள் நேரடியாக ஒலிபரப்பப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக அரசு சாரா விளம்பரங்களிலிருந்து ஆகாஷ்வாணி மற்றும் தூர்தர்ஷன் நிறுவனங்கள் 587.78 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205780®=3&lang=1
***
AD/SV/KPG/SE
(रिलीज़ आईडी: 2206268)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Bengali-TR
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali-TR
,
Bengali
,
Gujarati
,
Telugu
,
Kannada