உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்றதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, மத்திய அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

प्रविष्टि तिथि: 17 DEC 2025 11:01AM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும்கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷாஎத்தியோப்பியாவின் உயரிய விருதான 'கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியாவிருதைப் பெற்றதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையளிக்கக்கூடிய தருணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக 'எக்ஸ்தளத்தில் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில்இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையளிக்கக்கூடிய தருணம் என்று கூறியுள்ளார். எத்தியோப்பியாவின் உயரிய விருதான 'கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியாவிருதைப் பெற்ற பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர்இது திரு மோடியின் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளுக்கு மற்றொரு நாடு வழங்கும் 28-வது அங்கீகாரமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இது அவரது சீரிய தலைமையின் கீழ்உலக நாடுகளுடனான நல்லுறவில்இந்தியாவின் தலைமைத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த மரியாதை இந்தியா - எத்தியோப்பியா நாடுகளிடையேயான நட்புறவிற்கு மேலும் வலுசேர்ப்பதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

***

(Release ID:2205001)

SS/SV/SE


(रिलीज़ आईडी: 2205483) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam