பிரதமர் அலுவலகம்
நாட்டின் கலாச்சார சிறப்பையும் வடகிழக்கு மாநிலங்களின் எழுச்சியையும் பிரதிபலிக்கும் ஹார்ன்பில் விழா தொடர்பான கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
14 DEC 2025 11:32AM by PIB Chennai
நாகாலாந்தின் ஹார்ன்பில் திருவிழாவின் துடிப்பான உணர்வுகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (14.12.2025) புகழ்ந்துள்ளார். இது இந்தியாவின் கலாச்சார செழுமையையும், சிறப்பான பழங்குடியின பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
வடகிழக்குப் பகுதி, இப்போது, ஒரு புதிய நம்பிக்கையுடன் திகழ்கிறது என்பதை பிரதமர் எடுத்துரைத்துள்ளார். நாகாலாந்தின் தனித்துவமான கலாச்சார அடையாளத்தைப் பாராட்டியுள்ள திரு நரேந்தர மோடி, இந்த மாநிலம் கொண்டாட்டங்களை உள்ளடக்கிய பண்டிகைகளின் பூமி என்ற பெருமைக்குரிய பெயரைப் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியாவின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்குப் பதிலளிக்கும் வகையில் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்த சுவாரஸ்யமான கட்டுரையில், மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, நாகாலாந்தின் ஹார்ன்பில் விழா, மனித உணர்வின் வண்ணங்களை பிரதிபலிக்கும் கருவி என்றும், அது பழங்காலத்தையும் தற்காலத்தையும் இணைக்கும் சிறந்த ஒருங்கிணைப்பு விழா என்றும் விவரித்துள்ளார். வடகிழக்குப் பகுதி பிரகாசிக்கும்போதுதான் நமது நாடு உயரும் என்று அமைச்சர் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறார்.
வடகிழக்குப் பகுதியை, புதிய இந்தியாவின் நம்பிக்கை முகமாக அமைச்சர் எடுத்துக்காட்டியுள்ளார். நாகாலாந்து கொண்டாட்டங்களை உள்ளடக்கிய நிலம். அது பண்டிகைகளின் பூமி என்று அழைக்கப்படுவதை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்."
***
(Release ID: 2203663)
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2203674)
आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam