தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய பத்திரிகை தின நிகழ்ச்சி - மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்பு

Posted On: 16 NOV 2025 4:44PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இன்று (16.11.2025) நடைபெற்ற நிகழ்வில் "அதிகரித்து வரும் தவறான தகவல்களுக்கு மத்தியில் பத்திரிகைத் துறையின் நம்பகத்தன்மையைப் பாதுகாத்தல்" என்ற கருப்பொருளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றனஇதில் இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய்ஒவ்வொரு பத்திரிகையாளரும், மனசாட்சியுடனும் பொறுப்புணர்வுனும் செயல்பட்டு தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும், பத்திரிகையின் சிறந்த தரங்களைப் பராமரிப்பதிலும் பத்திரிகை கவுன்சிலின் பொறுப்பை நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் எடுத்துரைத்தார். குறிப்பாக தவறான தகவல்களும் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடும் அதிகரித்து வரும் இக்காலத்தில், நேர்மை, துல்லியம், சரியான தகவல்களைப் பகிர்வது ஆகியவற்றில் அர்ப்பணிப்பு தேவை என்று அவர் கூறினார்.

பிடிஐ செய்தி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு விஜய் ஜோஷி பேசுகையில், இன்று பரபரப்புத் தகவல் என்பது தொற்றுநோய் போல பரவுவதாகவும், இதை எதிர்த்து போராடி தவறான தகவல்களை தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஜனநாயகத்தின் தார்மீகக் கண்காணிப்பாளராக பத்திரிகைகள் செயல்பட வேண்டும் என்றும் வலுவான நெறிமுறைகளைப் பேண வேண்டும் என்றும் திரு விஜய் ஜோஷி கூறினார்.

நம்பகத்தன்மையைப் பாதுகாக்க எதிர்கால பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பத்திரிகை சுதந்திரம் என்பது தகவல் சூழல் அமைப்பை மாசுபடுத்துவதற்கான உரிமம் அல்ல என்றும், நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு பொது சேவை என்றும் திரு விஜய் ஜோஷி குறிப்பிட்டார்.

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, பத்திரிகை கவுன்சில் செயலாளர் திருமதி சுபா குப்தா உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190538

***

(Release ID: 2190538)

SS/PLM/RJ


(Release ID: 2190608) Visitor Counter : 8