பிரதமர் அலுவலகம்
திரு வால்டர் ரஸ்ஸல் மீட் தலைமையிலான அமெரிக்கக் குழுவுடன் பிரதமர் கலந்துரையாடினார்
Posted On:
07 OCT 2025 8:20PM by PIB Chennai
திரு வால்டர் ரஸ்ஸல் மீட் தலைமையிலான அமெரிக்க சிந்தனையாளர்கள் மற்றும் வர்த்தகத் தலைவர்கள் அடங்கிய குழுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.
இந்திய-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதிலும், உலகளாவிய அமைதி, வளர்ச்சி மற்றும் செழிப்பிற்காக இரண்டு நாடுகளுக்கும் இடையேயான கூட்டுமுயற்சியை மேம்படுத்துவதிலும் அவர்களது மதிப்புமிக்க பங்களிப்பைப் பிரதமர் பாராட்டினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“திரு வால்டர் ரஸ்ஸல் மீட் தலைமையிலான அமெரிக்க சிந்தனையாளர்கள் மற்றும் வர்த்தகத் தலைவர்கள் அடங்கிய குழுவுடன் கலந்துரையாடியது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதிலும், உலகளாவிய அமைதி, வளர்ச்சி மற்றும் செழிப்பிற்காக இரண்டு நாடுகளுக்கும் இடையேயான கூட்டுமுயற்சியை மேம்படுத்துவதிலும் அவர்களின் பங்களிப்பு, பாராட்டத்தக்கது.
@wrmead”
(Release ID: 2176015)
SS/BR/SH
(Release ID: 2176056)
Visitor Counter : 6