பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் ஈரநிலப் பாதுகாப்பு இயக்கத்தில் ஒரு மைல்கல்லாகப் பீகாரின் புதிய ராம்சர் தளங்கள்- பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 27 SEP 2025 6:00PM by PIB Chennai

பீகாரின் பக்சர் மாவட்டத்தில் கோகுல் ஜலஷே (448 ஹெக்டேர்), மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உதய்பூர் ஜீல் (319 ஹெக்டேர்) ஆகிய இரண்டு புதிய ராம்சர் தளங்கள் சேர்க்கப்பட்டதுஇந்தியாவின் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுக்கு பெருமை சேர்க்கும் தருணம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவின் பதிவிற்கு பதிலளித்து  பிரதமர் கூறியிருப்பதாவது;

அற்புதமான செய்தி! நிலையான வளர்ச்சிக்கு ஈரநிலங்கள் மிக முக்கியமானவை. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னணியில் இருப்பது எப்படி என்பதைச் சிந்தனையிலும் செயலிலும் காட்டும் பீகார் மக்களுக்கு ஒரு சிறப்பு பாராட்டு.

***

(Release ID: 2172186)

SS/PKV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2172250) வருகையாளர் எண்ணிக்கை : 42