பிரதமர் அலுவலகம்
ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள் உணவுப் பதப்படுத்துதல் துறையின் வளர்ச்சிக்கு வித்திடும்: பிரதமர்
Posted On:
19 SEP 2025 12:01PM by PIB Chennai
அண்மையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் தொழில்நுட்ப மாற்றம் மட்டுமின்றி எளிதாக வர்த்தகம் புரிவதற்கும் எளிமையான வாழ்க்கைக்கும் முதலீடுகளை ஈர்ப்பதற்குமான துணிச்சலான நடவடிக்கை என்று மத்திய அமைச்சர் திரு சிராக் பாஸ்வான், எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். அன்றாட உணவுகள் மற்றும் பாக்கேஜிங் மீதான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக மளிகை சமான்களின் விலைகள் குறைவதுடன், இத்துறையில் ஈடுபட்டுள்ள எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கும் உத்வேகம் அளிப்பதுடன், விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், உலக அளவில் உணவுப் பொருட்களுக்கான போட்டியில் இந்தியாவின் செயல்பாடுகளை உறுதி செய்யும் வகையிலும் அமையும் என்று தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எகஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் பதிவிட்டுள்ள கட்டுரைக்கு பதில் அளித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:
“அண்மையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், தொழில்நுட்ப மாற்றங்கள் மட்டுமின்றி எளிதான வாழ்க்கை, வர்த்தகம் புரிதலை எளிதாக்குதல் மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான துணிச்சலான நடவடிக்கை என்று மத்திய அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் எழுதியுள்ளார். அன்றாட உணவுகள் மற்றும் பேக்கேஜிங் மீதான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, மளிகை சாமான்களின் விலைகள் குறைவதுடன் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு உத்வேகம் அளித்திடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அமையும், சர்வதேச அளவில் உணவுப் பொருட்களுக்கான போட்டியில் இந்தியாவின் நிலைப்பாட்டை மேம்படுத்திட உதவிடும்.”
***
(Release ID: 2168354)
SS/SV/KPG/KR
(Release ID: 2168413)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam