பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்திலிருந்து பிரதமர் ஆய்வு செய்தார்

Posted On: 09 SEP 2025 5:34PM by PIB Chennai

2025 செம்டம்பர் 9 அன்று பஞ்சாபில் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, அங்கு கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளையும் வெள்ள நிலைமையையும், சேதங்களையும் ஆய்வு செய்தார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளை விமானத்திலிருந்து ஆய்வு செய்த பிரதமர், பின்னர் குருதாஸ்பூரில் அதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் ஆய்வு கூட்டத்தை நடத்தினார். பஞ்சாபில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் பற்றி ஆய்வு செய்த பிரதமர் மோடி சேதங்களையும் மதிப்பீடு செய்தார்.

ஏற்கனவே மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.12 ஆயிரம் கோடியுடன் கூடுதலாக ரூ.1600 கோடி நிதி உதவியையும் பிரதமர் அறிவித்தார். மாநில பேரிடர் நிவாரண நிதி, பிரதமரின் விவசாயி கௌரவிப்பு நிதி ஆகியவற்றின் இரண்டாவது தவணை முன்கூட்டியே விடுவிக்கப்படவுள்ளது.

பஞ்சாபில் வெள்ள சேதங்களை மதிப்பீடு செய்ய மத்திய அமைச்சகங்களின் குழுக்களை மத்திய அரசு பஞ்சாப் மாநிலத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த குழுக்களின் விரிவான அறிக்கை அடிப்படையில் கூடுதல் நிதியுதவி செய்வது பற்றி பரிசீலிக்கப்படும்.

இந்த இயற்கை சீற்றத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர், இக்கட்டான இந்த தருணத்தில் மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து பணியாற்றும் என்றும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் கூறினார்.

வெள்ளத்திலும் இயற்கை சீற்றத்திலும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் கருணை தொகையை அறிவித்த பிரதமர் மோடி படுகாயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் கருணை தொகையை அறிவித்துள்ளார்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு, பிஎம் கேர்ஸ் குழந்தைகளுக்கான திட்டத்தின் கீழ் விரிவான ஆதரவையும் அவர் அறிவித்தார். இது ஆதரவற்ற குழந்தைகளின் நீண்டகால நலனை உறுதி செய்யும்.

***

(Release ID: 2164996)

SS/SMB/RJ/KR


(Release ID: 2167174) Visitor Counter : 7