பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநிலம் பூர்ணியாவில் ரூ.40,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

நாட்டின் விமானப் போக்குவரத்து வரைபடத்தில் பூர்ணியா தற்போது இடம் பெற்றுள்ளது: பிரதமர்

தேசிய மக்கானா வாரியம் உருவாக்கப்படும் என்று பீகார் மக்களுக்கு நான் உறுதியளித்திருந்தேன்,

நேற்றுதான் அதை உருவாக்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது: பிரதமர்

இந்தியாவில் ஊடுருவல்காரர்களின் விருப்பப்படி அல்லாமல், இந்தியாவின் சட்டமே விளங்கும், இது மோடியின் உத்தரவாதம்: ஊடுருவல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், நாடு நேர்மறையான முடிவுகளைக் காணும்: பிரதமர்

Posted On: 15 SEP 2025 5:50PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநிலம் பூர்ணியாவில் ரூ.40,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்து புதிய பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர்கூடியிருந்தோர் அனைவருக்கும் தமது மரியாதைக்குரிய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். பூர்ணியா என்பது மா பூரண் தேவிபக்த பிரஹ்லாத் மற்றும் மகரிஷி மெஹி பாபாவின் பூமி என்று அவர் குறிப்பிட்டார். இந்த மண் பனீஷ்வர்நாத் ரேணு மற்றும் சதிநாத் பாதுரி போன்ற இலக்கிய மேதைகளை கண்டுள்ளது என்று திரு மோடி எடுத்துரைத்தார். வினோபா பாவே போன்ற அர்ப்பணிப்புள்ள கர்மயோகிகளின் கர்மபூமி இது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த பூமியின் மீதான தமது ஆழ்ந்த மரியாதையை மீண்டும் வெளிப்படுத்தினார்.

பீகாரில் சுமார் ரூ.40,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டப்படுவதாக அறிவித்த திரு மோடிரயில்வேவிமான நிலையங்கள்மின்சாரம் மற்றும் நீர் உள்ளிட்ட இந்தத் திட்டங்கள் சீமாஞ்சலின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான வழியாக செயல்படும் என்பதை எடுத்துரைத்தார். பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 40,000-க்கும் மேற்பட்ட பயனாளிகள் நிரந்தர வீடுகளைப் பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார். இதுஇந்த 40,000 குடும்பங்களின் வாழ்க்கையில் தற்போது ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். தந்தேராஸ்தீபாவளி மற்றும் சத் பூஜைக்கு முன் நிரந்தர வீட்டில் நுழைவது ஒரு பெரிய அதிர்ஷ்டம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த அனைத்து குடும்பங்களுக்கும் அவர் தமது நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

வீடற்ற சகோதர சகோதரிகளுக்கு ஒரு நாள் நிரந்தர வீடு கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துவதே இன்றைய நிகழ்ச்சியாகும் என்று குறிப்பிட்ட பிரதமர்கடந்த 11 ஆண்டுகளில்ஏழைகளுக்கு 4 கோடிக்கும் மேற்பட்ட நிரந்தர வீடுகளை அரசு கட்டி வழங்கியுள்ளது என்று கூறினார். அரசு தற்போது 3 கோடி புதிய வீடுகளைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக அவர் மேலும் கூறினார். ஒவ்வொரு ஏழைக் குடிமகனுக்கும் நிரந்தர வீடு கிடைக்கும் வரைமோடி ஓயமாட்டேன் என்று திரு மோடி உறுதிப்படுத்தினார். விளிம்புநிலை மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் ஏழைகளுக்கு சேவை செய்வதும் தமது ஆட்சியின் முக்கிய நோக்கம் என்று அவர் எடுத்துரைத்தார்.

பொறியாளர்கள் தினமான இன்றுநாடு முழுவதும் உள்ள அனைத்து பொறியாளர்களுக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்தார். பொறியாளர்களின் அர்ப்பணிப்பும் திறமையும் இன்றைய நிகழ்விலும் தெளிவாகத் தெரிகிறது என்று திரு மோடி எடுத்துரைத்தார். பூர்ணியா விமான நிலையத்தின் முனையக் கட்டிடம் ஐந்து மாதங்களுக்கும் குறைவான காலத்தில் கட்டப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். இந்த முனையம்  திறக்கப்படுவதை அறிவித்து முதல் வணிக விமானத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய விமான நிலையம் தொடங்கப்பட்டதன் மூலம்பூர்ணியா தற்போது நாட்டின் விமானப் போக்குவரத்து வரைபடத்தில் இடம்பிடித்துள்ளது என்று பிரதமர் கூறினார். இது பூர்ணியா மற்றும் சீமாஞ்சல் இடையே நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய வணிக மையங்களுடன் நேரடி போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

                                                                             ***

 

AD/IR/AG/SH

 

(Release ID: 2166918) Visitor Counter : 2