பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அசாமில் இந்திய மேலாண்மை நிறுவனம் அமைக்கப்பட்டதற்காக மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 20 AUG 2025 7:48PM by PIB Chennai

அசாமில் இந்திய மேலாண்மை நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டதற்காக அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மேலாண்மை நிறுவனம் அமைக்கப்பட்டதன் மூலம் மாநிலத்தில் கல்வி உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றும், நாடு முழுவதிலும் இருந்து மாணவர்களையும், ஆய்வாளர்களையும்  இந்த நிறுவனம் ஈர்க்கும் என்றும் திரு மோடி தெரிவித்தார்.

 அசாமில் இந்திய மேலாண்மை நிறுவனம் உருவாக்கப்பட்டது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்ட பதிவிற்கு பதிலளித்து திரு மோடி கூறியதாவது:

அசாம் மாநில மக்களுக்கு வாழ்த்துகள்!  மாநிலத்தில் இந்திய மேலாண்மை நிறுவனம் நிர்மாணிக்கப்பட்டிருப்பது, கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், நாடு முழுவதிலும் இருந்து மாணவர்களையும், ஆய்வாளர்களையும்  ஈர்க்கும்.

***

(Release ID: 2158603)

SS/BR/KR


(रिलीज़ आईडी: 2158913) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Marathi , Assamese , Bengali-TR , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam