பிரதமர் அலுவலகம்
ஆறு ஆண்டு கால ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் 15 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு தூய்மையான குடிநீர் வழங்குவது உறுதிசெய்யப்படுகிறது - பிரதமர்
Posted On:
14 AUG 2025 1:41PM by PIB Chennai
ஜல்ஜீவன் இயக்கத்தின் ஆறு ஆண்டுகள் நிறைவு குறித்து இன்று குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தனி வீடுகளுக்கு குழாய் மூலம் போதுமான குடிநீரை பாதுகாப்பாக கிடைக்கச் செய்வதை உறுதிசெய்வதன் மூலம் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான வீடுகளில் இந்த முன் முயற்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜல்ஜீவன் இயக்கம் வெறும் சில ஆண்டுகளில் 15 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு தூய்மையான குடிநீரை வழங்குவதன் மூலம் அரசின் உறுதிப்பாட்டின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. இது சுகாதாரத்தை மேம்படுத்தி, சமூகத்தினருக்கு அதிகாரமளித்து, எண்ணற்றோரின் கனவுகளை நிறைவேற்றியுள்ளது.
இந்தத் திட்டம் இந்தியாவின் ஊரகப்பகுதிகளில் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியதோடு மட்டுமின்றி சுகாதார நலனையும் சிறப்பாக வலுவடையச் செய்தது. குறிப்பாக மகளிர் பயனடைகின்றனர்- இந்தியாவின் மகளிர் சக்தி.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்ட மைகவ் இந்தியாவின் தனிப்பட்ட பதிவுக்கு பதிலளித்து திரு மோடி எழுதியிருப்பதாவது:
“கண்ணியம் மற்றும் மாற்றத்தக்க வாழ்க்கையில் கவனம் செலுத்தும் ஜல்ஜீவன் இயக்கத்தின் ஆறு ஆண்டுகளை நாம் குறிப்பிடுகிறோம். இது குறிப்பாக நமது மகளிர் சக்திக்கும் சிறந்த சுகாதார நலனை உறுதிசெய்துள்ளது.”
“இந்தியாவில் ஜல் ஜீவன் இயக்கத்தின் நீடித்த தாக்கம் குறித்த ஒரு பார்வை.
#6YearsOfJalJeevanMission”
***
(Release ID: 2156320)
SS/IR/AG/RJ/DL
(Release ID: 2156509)
Read this release in:
Marathi
,
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam