தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச திரைப்படங்களை உள்நாட்டில் தயாரிப்பதற்கு ஏதுவாக இந்திய திரைப்பட மைய இணையதளத்தை மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு வலியுறுத்தல்

Posted On: 05 AUG 2025 6:39PM by PIB Chennai

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செய்தி மக்கள் தொடர்புத்துறை செயலாளர்கள் பங்கேற்கும் மாநாடு புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டை  மத்திய தகவல்  ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ மற்றும் துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் இம்மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினர்

இந்த மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் எல் முருகன் இந்திய திரைப்பட மையத்தின் இணையதளம்  ஒற்றைச் சாளர அமைப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் திரைப்படங்களைத் தயாரிப்பதற்கான அனுமதி உள்ளிட்ட பிற சேவைகளை இந்த இணையதளத்தின் மூலம் பெறமுடியும் என்றும்  தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்திய திரைப்படத்துறையின்  வளர்ச்சிக்குத் தேவையான கொள்கைகள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

நாட்டின் படைப்பாற்றல் சார்ந்த பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், உலக அளவில் இந்திய கலாச்சாரத்தைக் கொண்டு செல்லும் வகையிலும், எதிர்காலத்திற்குத் தேவையான படைப்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையிலும், வேவ்ஸ் 2025, சர்வதேச திரைப்பட திருவிழா உள்ளிட்ட  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் படைப்பாற்றல், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், திரைப்படத் தயாரிப்புக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிக்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும்,  இந்திய திரைப்பட மையம் மற்றும் பத்திரிகை சேவை இணையதளம் (PRGI) போன்ற வலைதளங்களின் செயல்பாடுகளை  மேம்படுத்தும் வகையிலும் மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் பொதுத் தகவல் தொடர்பு குறித்த செயல்பாடுகளை வலுப்படுத்துவதை இம்மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.  

***

(Release ID:2152689)

AD/SV/KPG/KR


(Release ID: 2153150)