பிரதமர் அலுவலகம்
பிலிப்பைன்ஸ் அதிபரின் இந்திய வருகையால் ஏற்பட்டுள்ள பலன்கள்
Posted On:
05 AUG 2025 4:31PM by PIB Chennai
உடன்பாடு / புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே உத்திசார் கூட்டாண்மையை ஏற்படுத்துவது குறித்த பிரகடனம்.
- இந்தியா – பிலிப்பைன்ஸ் உத்திசார் கூட்டாண்மை : செயல்திட்டம் (2025-29)
- இந்திய விமானப்படை, பிலிப்பைன்ஸ் விமானப்படை இடையே, விமானப்படை வீரர்கள் குறித்த பேச்சுவார்த்தைக்கான விதிமுறைகள்.
- இந்திய ராணுவம், பிலிப்பைன்ஸ் ராணுவம் இடையே ராணுவ வீரர்கள் குறித்த பேச்சுவார்த்தைக்கான விதிமுறைகள்.
- இந்திய கடற்படை, பிலிப்பைன்ஸ் கடற்படை இடையே கடற்படை வீரர்கள் குறித்த பேச்சுவார்த்தைக்கான விதிமுறைகள்.
- இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே கிரிமினல் விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவிக்கான ஒப்பந்தம்.
- இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே தண்டிக்கப்பட்ட நபர்களை பரிமாற்றம் செய்வதற்கான ஒப்பந்தம்.
- இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை – பிலிப்பைன்ஸ் தொழில்நுட்பத் துறை இடையே 2025-28 காலத்தில் அறிவியல் தொழில்நுட்பத்துறையில், ஒத்துழைப்புத் திட்டம்.
- இந்திய சுற்றுலாத்துறை – பிலிப்பைன்ஸ் சுற்றுலாத்துறை இடையே 2025-28 காலத்தில் சுற்றுலா ஒத்துழைப்புத் திட்டம்.
- இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே டிஜிட்டல் தொழில்நுட்பத்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- இந்தியாவின் இஸ்ரோ மற்றும் பிலிப்பைன்ஸின் விண்வெளி முகமை இடையே விண்வெளியை அமைதிக்குப் பயன்படுத்துவது குறித்த விருப்ப அறிக்கை.
- இந்தியக் கடலோரக் காவல் – பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படை இடையே கடல்சார் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான விதிமுறைகள்.
- இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே கலாச்சார பரிவர்த்தனைத் திட்டம்.
அறிவிப்புகள்
- பிலிப்பைன்ஸின் இறையாண்மைமிக்க தரவு சேகரிப்பு உள்கட்டமைப்பை உருவாக்கும் முன்னோடித் திட்டத்திற்கு இந்தியாவின் ஆதரவு.
- தகவல் ஒருங்கிணைப்பு மையம் – இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பங்கேற்க பிலிப்பைன்ஸுக்கு இந்தியாவின் அழைப்பு.
- ஓராண்டுக் காலத்திற்கு (ஆகஸ்ட் 2025 முதல்) பிலிப்பினோ மக்களுக்கு இ-சுற்றுலா விசா வசதி.
- இந்தியா – பிலிப்பைன்ஸ் தூதரக உறவுகளின் 75-வது ஆண்டினை நினைவுகூர கூட்டாக தபால் தலை வெளியீடு.
- இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே முன்னுரிமை வர்த்தக பேச்சுவார்த்தை வரம்புகள் ஏற்பு.
----
(Release ID: 2152547)
AD/SMB/KPG/KR/DL
(Release ID: 2152734)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam