பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

'டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் உயரிய விருது வழங்கப்பட்டதையொட்டி பிரதமரின் ஏற்புரை

Posted On: 04 JUL 2025 10:45PM by PIB Chennai

நமஸ்கார்,

அனைவருக்கும் காலை வணக்கம்,

அதிபர் கிறிஸ்டின் கங்காலூ அவர்களே,

பிரதமர் கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசர் அவர்களே,

மதிப்புமிக்க விருந்தினர்களே,

எனக்கு மிக உயர்ந்த தேசிய விருதான 'ஆர்டர் ஆப்தி டிரினிடாட் மற்றும் டொபாகோ ரிபப்ளிக் ‘ வழங்கியதற்காக உங்களுக்கும், உங்கள் அரசுக்கும், உங்கள் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மரியாதை நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நிரந்தரமான  மற்றும் ஆழமான நட்பைக் குறிக்கிறது. 140 கோடி இந்தியர்களின் சார்பாக நான் இதைப் பகிர்ந்து கொள்ளும் பெருமையாக ஏற்றுக்கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்த மரியாதை முதல் முறையாக ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு வழங்கப்படுவது நமது சிறப்பான உறவின் ஆழத்தைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பிணைப்பு நமது பகிரப்பட்ட வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ளது.
180 ஆண்டுகளுக்கு முன்பு பாரதத்திலிருந்து இங்கு வந்தவர்கள் நமது நட்பின் அடித்தளத்தை அமைத்தனர். அவர்கள் வெறுங்கையுடன் வந்திருந்தாலும், அவர்களின் மனம் இந்திய நாகரிகம், கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையால் வளப்படுத்தப்பட்டது. அவர்கள் விதைத்த நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் விதைகள் இப்போது டிரினிடாட் மற்றும் டொபாகோவின் முன்னேற்றம் மற்றும் செழிப்பு வடிவத்தில் மலர்ந்துள்ளன.
இந்திய சமூகம் இன்றுவரை நமது பொதுவான மரபுகள், கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களைப் பாதுகாத்து வருகிறது என்பது மிகுந்த பெருமைக்குரிய விஷயம். அதிபர்  கங்கலூ  மற்றும் பிரதமர் கம்லா  ஆகியோர் இந்தச் சமூகத்தின் மிகச்சிறந்த பிராண்ட் தூதர்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சாரப் பரிமாற்றம் ஒவ்வொரு செயலிலும் தெரியும்.
நண்பர்களே,
அதிபர் கங்கலூவின் மூதாதையர்கள் புனித திருவள்ளுவரின் பூமியான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, புனித திருவள்ளுவர் கூறினார்:
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு 
அதாவது — ஒரு வலிமையான தேசம் ஆறு விஷயங்களைக் கொண்டிருக்க வேண்டும்: ஒரு வீரம் மிக்க ராணுவம், தேசபக்தி கொண்ட மக்கள், வளங்கள், நல்ல பிரதிநிதிகள், ஒரு வலுவான பாதுகாப்பு... மற்றும் எப்போதும் துணை நிற்கும் நட்பு நாடுகள். டிரினிடாட் மற்றும் டொபாகோ பாரதத்திற்கு சிறந்த  நட்பு நாடாக திகழ்கிறது.
நமது உறவில் கிரிக்கெட்டின் சிலிர்ப்பு மற்றும் டிரினிடாடியன் மிளகின் மசாலா ஆகியவை அடங்கும். நம் இரு கலாச்சாரங்களுக்கும் இடையிலான ஆழமான நல்லிணக்கம் நம்  உறவின் ஒரு பெரிய பலமாகும்.
நண்பர்களே,
இந்தக் கௌரவத்தை நமது உறவின் மீதான ஒரு பொறுப்பாகவும் நான் கருதுகிறேன். ஒரு நெருங்கிய மற்றும் நம்பகமான கூட்டாளியாக, டிரினிடாட் மற்றும் டொபாகோ மக்களின் திறன் மேம்பாட்டை நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம். பாரதத்தைப் பொறுத்தவரை, டிரினிடாட் மற்றும் டொபாகோ, காரிகோம் அமைப்பில்  ஒரு முக்கிய உறுப்பினராக  மட்டுமல்லாமல், உலகளவில் ஒரு முக்கியமான பங்குதாரர் நட்டாகவும்  உள்ளது.

உலகின் தெற்கு பகுதி முழுவதற்கும் நமது ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. இரண்டு துடிப்பான ஜனநாயக நாடுகளாக, நம் இரு மக்களின் நலனுக்காகவும், அனைத்து மனிதகுலத்தின் நலனுக்காகவும் நாம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.
மேன்மைதங்கிய அதிபர்  அவர்களே,

மீண்டும் ஒருமுறை, 140 கோடி இந்தியர்களின் சார்பாக, இந்தக் கௌரவத்திற்காக எனது  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அங்கீகாரம், ஒவ்வொரு துறையிலும் அதிக உயரங்களை அடைய எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
மிக்க நன்றி.

******

AD/PKV/DL


(Release ID: 2144188)