பிரதமர் அலுவலகம்
சான் மார்ட்டின் நினைவிடத்தில் பிரதமர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 JUL 2025 12:52AM by PIB Chennai
அர்ஜென்டினாவின் தேசத் தந்தை ஜெனரல் ஜோஸ் டி சான் மார்டினுக்கு அஞ்சலி செலுத்தி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது அர்ஜெண்டினாவுக்கான அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கினார்.
பிரதமர், பிளாசா சான் மார்டினுக்குச் சென்று நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தார். அர்ஜெண்டினா மற்றும் பல தென் அமெரிக்க நாடுகளின் விடுதலை வீரராக ஜெனரல் ஜோஸ் டி சான் மார்டினின் நீடித்த மரபை அங்கீகரித்து, அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தினார். அவரது பங்களிப்பையும் அவரது மதிப்புகளையும் இந்தியா போற்றுகிறது. அர்ஜெண்டினா தலைவரின் பெயரில், புது தில்லியில் உள்ள ஒரு சாலை அவரது பாரம்பரியத்தை நமக்கு தொடர்ந்து நினைவூட்டுகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் பிரகாசமான அடையாளமாக நிற்கிறது.
****
(Release ID: 2142575)
AD/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2142697)
வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam