பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி டிரினிடாட் - டொபாகோ அதிபரைச் சந்தித்தார்
प्रविष्टि तिथि:
04 JUL 2025 11:37PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள அதிபர் மாளிகையில் டிரினிடாட் - டொபாகோ குடியரசின் அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்காலூவைச் சந்தித்தார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான வேரூன்றிய நட்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
பிரதமர் தமக்கும் தனது பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார், மேலும் டிரினிடாட் டொபாகோவின் உயரிய விருது தமக்கு வழங்கப்பட்டதற்கும் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இது 140 கோடி இந்திய மக்களுக்கு ஒரு மரியாதை என்று அவர் கூறினார்.
இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் நீடித்த பிணைப்புகளை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர்.
உலகளாவிய தென்பகுதி நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். இந்தியாவுக்கு வருகை தருமாறு டிரினிடாட் டொபாகோ அதிபர் கங்காலூவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
******
(Release ID: 2142383)
AD/TS/PLM/SG
(रिलीज़ आईडी: 2142514)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam