உள்துறை அமைச்சகம்
நாட்டில் வெள்ள மேலாண்மை தயார்நிலை குறித்து மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Posted On:
10 JUN 2025 8:17PM by PIB Chennai
நாட்டில் வெள்ள மேலாண்மைக்கான தயார்நிலையை ஆய்வு செய்வது தொடர்பாக புதுதில்லியில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமை தாங்கினார். நாட்டில் வெள்ள அச்சுறுத்தலைத் தணிப்பதற்காக எடுக்கப்பட்ட நீண்டகால நடவடிக்கைகள் மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு செய்தார்.
வெள்ள மேலாண்மைக்காக அனைத்து நிறுவனங்களும் ஏற்றுக்கொண்ட புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் வலையமைப்பை விரிவுபடுத்துதல் குறித்தும் அமைச்சர் விவாதித்தார். வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் நீர் மேலாண்மைக்காக பல்வேறு மத்திய நிறுவனங்கள் விண்வெளி தொழில்நுட்பத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதை அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியாவின் பேரிடர் மேலாண்மை 'பூஜ்ஜிய விபத்து அணுகுமுறையுடன்' முன்னேறி வருவதாக திரு. அமித் ஷா கூறினார். ஆரம்ப எச்சரிக்கைகளை அடிமட்ட அளவில் பரப்புவதை உறுதி செய்வதற்காக மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உடன் ஒருங்கிணைந்து செயல்பட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அவர் உத்தரவிட்டார். மேலும் வெள்ள மேலாண்மைக்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கிய ஆலோசனைகளை சரியான நேரத்தில் செயல்படுத்த அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய நீர் ஆணையத்தின் வெள்ள கண்காணிப்பு மையங்கள் நமது தேவைகளுக்கும் சர்வதேச தரத்திற்கும் ஏற்ப இருக்க வேண்டும் என்று திரு ஷா கூறினார். ஜல் சக்தி அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய தொலைதூர உணர்திறன் மையம் ஆகியவை பனிப்பாறை ஏரிகளை உன்னிப்பாகக் கண்காணித்து, ஏதேனும் வெடிப்புகள் ஏற்பட்டால் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் /இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநிலங்களுடன் இணைந்து மாநில மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகளிலும் சீரான வடிவமைப்பு மாற்றங்களை உறுதி செய்ய வேண்டும் என்றும், இதனால் கனமழை ஏற்பட்டால் சாலைகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கைச் சமாளிக்க நெடுஞ்சாலை வடிகால் அமைப்பு, சாலை கட்டுமான வடிவமைப்புகளின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறும் என்றும் உள்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135486
***
(Release ID: 2135486)
AD/RB/DL
(Release ID: 2135523)
Read this release in:
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Bengali-TR
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam