இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுகள் விளையாட்டில் மாற்றத்தக்க சக்தியை பிரதிபலித்து புதிய அத்தியாயத்தை சேர்த்துள்ளது: பிரதமர் திரு நரேந்திர மோடி
Posted On:
20 MAY 2025 8:45AM by PIB Chennai
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுகள் விளையாட்டில் மாற்றத்தக்க சக்தியை ஏற்படுத்தி நாட்டின் விளையாட்டுத் துறை வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி திங்களன்று தெரிவித்தார். தாத்ரா, நாகர் ஹவேலி மற்றும் டாமன், டையூ யூனியன் பிரதேசத்தில் உள்ள விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்துள்ள செய்தியில், இந்தியாவின் விளையாட்டு நாட்காட்டியில் கடற்கரை விளையாட்டுகள் அலையை ஏற்படுத்தும் என்று உறுதியளிப்பதாக கூறி தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுகளுக்கான இடமாக டையூவைத் தேர்ந்தெடுத்தது "பொருத்தமானது" என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். "சூரியன், மணல் மற்றும் நீர் ஆகியவற்றின் கலவையானது, உடல் ரீதியான சவாலை மேம்படுத்துவதோடு, அதே நேரத்தில், நமது கடலோர பாரம்பரியத்தையும் கொண்டாடுகின்றன," என்றும், இந்தியா ஒரு புதிய விளையாட்டு அத்தியாயத்தைப் படைக்கும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி மேலும் கூறினார்.
கேலோ இந்தியா விளையாட்டின் கீழ் முதன்முறையாக நடைபெறும் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, திங்களன்று டையூவில் உள்ள விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் கோக்லா கடற்கரையில் நடைபெற்ற வண்ணமயமான நிகழ்ச்சியில் முறைப்படி தொடங்கி வைத்தார்.
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் 30க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1,350க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களை ஒன்றிணைத்துள்ளன. மே 24 அன்று, விளையாட்டுப் போட்டிகள் முடிவடைய திட்டமிடப்பட்டிருக்கும் போது, விளையாட்டு வீரர்கள் ஆறு பதக்க விளையாட்டுகளில் போட்டியிட்டிருப்பார்கள் - கால்பந்து, கைப்பந்து, செபக்தக்ரா, கபடி, பென்காக்ஸிலட் மற்றும் திறந்தவெளியில் நீச்சல் போட்டி இடம் பெறுகிறது. மல்லகம்ப், கயிறு இழுத்தல் ஆகியவை பதக்கம் அல்லாத பிரிவுகளில் இடம் பெற்றுள்ளது. திங்கள்கிழமை காலை கடற்கரை கால்பந்து போட்டிகள் தொடங்கியது.
"நம்மைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், விளையாட்டு எப்போதும் கலாச்சாரங்கள், பிராந்தியங்கள் மற்றும் மொழிகளை ஒன்றிணைக்கும் ஒரு தனித்துவமான சக்தியைக் கொண்டுள்ளது. விளையாட்டின் துடிப்பான ஆற்றல் பொழுதுபோக்குக்கு அப்பாற்பட்டது மற்றும் நமது இளைஞர்களின் தேசிய பெருமை மற்றும் விருப்பங்களை அடையாளப்படுத்தும் ஒரு மாபெரும் சக்தியாக மாறியுள்ளது. இந்த சூழலில்தான் கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுகள் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன," என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129778
***
SM/IR/RR/KR
(Release ID: 2129806)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Gujarati
,
Kannada
,
Malayalam