பிரதமர் அலுவலகம்
புனித போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
21 APR 2025 2:20PM by PIB Chennai
புனித போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். கருணை, பணிவு, ஆன்மீக துணிவு ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர் அவர் என்று பிரதமர் பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
“புனித போப் பிரான்சிஸ் மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன். இந்த சோகமான தருணத்தில் உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனம் நெகிழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருணை, அடக்கம், ஆன்மீகத் துணிவு ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார். யேசு கிறிஸ்துவின் போதனைகளை நனவாக்க அவர் இளம் வயதிலிருந்தே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஏழைகளுக்கும், அடித்தள மக்களுக்கும் அவர் அயராது பாடுபட்டார். துன்பத்தில் வாழ்கின்றவர்களுக்கு அவர் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தினார்.
அவருடனான எனது சந்திப்பை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். அனைவரையும் உள்ளடக்கிய அனைத்து நிலையிலான வளர்ச்சிக்கு அவரது உறுதிப்பாடு எனக்கு மிகவும் ஊக்கத்தை அளித்தது. இந்திய மக்கள் மீதான அவரது அன்பு எப்போதும் போற்றத்தக்கதாக இருக்கும். அவரது ஆன்மா இறைவனின் திருவடியில் நித்திய சாந்தியடையட்டும்.”
***
(Release ID: 2123125)
TS/SMB/RR/KR
(Release ID: 2123144)
Visitor Counter : 28
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Nepali
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam