பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முத்ரா திட்டம் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தின் விளைவுகளுக்குப் பிரதமர் பாராட்டு

Posted On: 08 APR 2025 9:08AM by PIB Chennai

பிரதமரின் முத்ரா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவையொட்டி அதன் பயனாளிகளுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கனவுகளை நிஜமாக்குதல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் சென்ற பத்தாண்டுகளைக் குறிப்பிட்டுள்ள பிரதமர், இந்தியா முழுவதும் விளிம்புநிலை சமூகங்களை மேம்படுத்துவதிலும், தொழில்முனைவோரை ஊக்குவிப்பதிலும் முத்ரா திட்டம் முக்கியப் பங்காற்றி உள்ளதையும சுட்டிக் காட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"இன்று, முத்ரா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவையொட்டி, அதன் மூலம் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டுள்ள அனைவரையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். இந்தப் பத்தாண்டுகளில், முத்ரா திட்டம் பல கனவுகளை நனவாக்கியுள்ளது. இது முன்பு கவனிக்கப்படாத மக்களுக்கு நிதி உதவி மூலம் பிரகாசிக்க அதிகாரம் அளித்துள்ளது. இந்திய மக்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது!"

"முத்ரா பயனாளிகளில் பாதிப் பேர் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், பயனாளிகளில் 70%-க்கும் அதிகமானோர் பெண்கள் என்பதும் குறிப்பாக மகிழ்ச்சியளிக்கிறது! ஒவ்வொரு முத்ரா கடனும் கண்ணியம், சுயமரியாதை மற்றும் வாய்ப்பைக் கொண்டுள்ளது. நிதி சேர்க்கை அளித்தது மட்டும் அல்லாமல் கூடுதலாக, இந்தத் திட்டம் சமூக உள்ளடக்கம் மற்றும் பொருளாதார சுதந்திரத்தையும் உறுதி செய்துள்ளது.

"வரவிருக்கும் காலங்களில், ஒவ்வொரு ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கும் கடன் கிடைக்கும் ஒரு வலுவான சூழல் அமைப்பை உறுதி செய்வதில் எங்கள் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும். அவர்களுக்கு நம்பிக்கையையும் வளர வாய்ப்பையும் இது அளிக்கிறது."

***

(Release ID: 2119932)
TS/PKV/RR/KR


(Release ID: 2119977) Visitor Counter : 40