பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநிலத்தில் கிர் உயிரினப் பூங்காவைப் பிரதமர் பார்வையிட்டார்
கடந்த பல ஆண்டுகளாக ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை உறுதி செய்யும் வகையிலான கூட்டு முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
03 MAR 2025 12:03PM by PIB Chennai
கம்பீரமான ஆசிய சிங்கங்களின் இருப்பிடமாக அறியப்படும் குஜராத்தின் கிர் உயிரினப் பூங்காவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். கடந்த பல ஆண்டுகளாக ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை உறுதி செய்யும் வகையிலான கூட்டு முயற்சிகளுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
"உலக வனஉயிரின தினமான இன்று காலை நான் கிர் உயிரினப் பூங்காவில் சஃபாரி பயணம் சென்றேன். இது கம்பீரமான ஆசிய சிங்கங்களின் தாயகமாகும். நான் குஜராத் முதலமைச்சராகப் பணியாற்றியபோது நாங்கள் கூட்டாக மேற்கொண்ட பணிகள் குறித்த நினைவுகள் கிர் பயணத்தின் போது ஞாபகத்துக்கு வந்தன. கடந்த பல ஆண்டுகளில், கூட்டு முயற்சிகள் காரணமாக சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசிய சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் பழங்குடி சமூகங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பெண்களின் பங்கு பாராட்டத்தக்கது.
"கிர் உயிரினப்பூங்காவிலிருந்து சில காட்சிகள். எதிர்காலத்தில் கிர் உயிரினப் பூங்காவிற்கு வந்து பார்வையிடுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்".
"கிர் உயிரினப் பூங்காவில் ஆண் சிங்கங்களும், பெண் சிங்கங்களும்! இன்றைக்கு காலையில் சில புகைப்படங்கள் எடுத்தேன்."
*****
TS/SV/KPG/RR/DL
(रिलीज़ आईडी: 2107703)
आगंतुक पटल : 104
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam