தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உடல் திறனுடன் கூடிய ஆரோக்கியமான இந்தியாவை நோக்கிய பயணம்: கூட்டு செயல்பாடுகள் மூலம் உடல் பருமன் பிரச்சினைக்குத் தீர்வு

Posted On: 01 MAR 2025 10:41AM by PIB Chennai

 

"நமது உணவுப் பழக்கவழக்கங்களில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம், நமது எதிர்காலத்தை வலுவானதாகவும், உடல் திறனுடனும், நோயற்றதாகவும் மாற்ற முடியும்."

-பிரதமர் திரு நரேந்திர மோடி

உடல் பருமன் இந்தியாவில் ஒரு பெரிய பொது சுகாதார சவாலாக மாறியுள்ளது. இது அனைத்து வயதினரையும் இது பாதிக்கிறது, நீரிழிவு, இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களின் அபாயத்தை இது அதிகரிக்கிறது. ஆரோக்கியமற்ற உணவுகள், உடல் உழைப்பு அற்ற உட்கார்ந்த வாழ்க்கை முறைகள், சுற்றுச்சூழல் காரணிகள் போன்றவற்றால் உடல் பருமன் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகிறது. இது நகர்ப்புற, கிராமப்புற என இருதரப்பு மக்களையும் பாதிக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை நோக்கிய மாற்றம், உடல் செயல்பாடு குறைதல், வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை இந்த வளர்ந்து வரும் நெருக்கடிக்கு மேலும் பங்களித்துள்ளன.

இந்த பிரச்சினையின் அவசரத்தை உணர்ந்து, பிரதமர் திரு நரேந்திர மோடி தனது சமீபத்திய மனதின் குரல் உரையில், உடல் பருமனைக் குறைக்க, குறிப்பாக சமையல் எண்ணெய் நுகர்வைக் குறைப்பதன் மூலம் நாடு தழுவிய கூட்டு விழிப்புணர்வின் நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தினார். விழிப்புணர்வு இயக்கத்தை வழிநடத்த இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நபர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். கூட்டு நடவடிக்கைக்கான இந்த அழைப்பு தனிநபர், சமூக மட்டங்களில் உடல் பருமனைக் கையாள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

இது ஆரோக்கியமான இந்தியாவின் தேவையை வலுப்படுத்துகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சிறந்த ஊட்டச்சத்து, உடல் செயல்பாடுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக ஃபிட் இந்தியா இயக்கம், போஷன் அபியான், ஈட் ரைட் இந்தியா, கேலோ இந்தியா உள்ளிட்ட பல முயற்சிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டங்கள் நீண்டகால நடத்தை மாற்றத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அனைவருக்கும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்கின்றன. இந்தியா அமிர்த காலத்தை நோக்கி முன்னேறி வரும் நிலையில், உடல் பருமனை சமாளிக்க முழு அரசு, முழு சமூக அணுகுமுறை தேவை. பொது சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துதல், நிலையான உணவுப் பழக்கத்தை ஊக்குவித்தல், விழிப்புணர்வை அதிகரிப்பது ஆகியவை இந்த போக்கை மாற்றியமைப்பதற்கும், உடல் பருமன் தொடர்பான அபாயங்களிலிருந்து எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதற்கும் முக்கியமாகும்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, உடல் பருமன் என்பது அசாதாரண அல்லது அதிகப்படியான கொழுப்பு குவிப்பு என வரையறுக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. உடல் பருமனை வகைப்படுத்த பொதுவாகப் பயன்படுத்தப்படும் அளவு உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) ஆகும். இதில் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ அதிக எடையாகக் கருதப்படுகிறது. 30 அல்லது அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ பருமனாக வகைப்படுத்தப்படுகிறது. ஒரு நபரின் பிஎம்ஐ 35 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கும்போது நோயுற்ற உடல் பருமன் ஏற்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஒரு சாதாரண பிஎம்ஐ 18.5 முதல் 24.9 வரை என்பதாகும்.

உலக அளவில் பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரது மத்தியிலும் அதிக எடை, உடல் பருமன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 1990 - 2022 க்கு இடையில், உடல் பருமன் உள்ள குழந்தைகள், இளம் பருவத்தினரின் (5-19 வயதுடையவர்கள்) சதவீதம் 2% முதல் 8% வரை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில், உடல் பருமன் கொண்ட பெரியவர்களின் விகிதம் (18 வயது அதற்கு மேற்பட்டவர்கள்) இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, 7% முதல் 16% வரை உயர்ந்தது.

இந்தியாவில் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்தமாக, 24% இந்திய பெண்களும் 23% இந்திய ஆண்களும் அதிக எடை அல்லது பருமனானவர்களாக உள்ளனர்.

உடல் பருமனை ஒரு முக்கியமான பொது சுகாதார கவலையாக அங்கீகரித்து, மத்திய அரசு அனைத்து மட்டங்களிலும் உடல் பருமனைத் தடுக்கவும், நிர்வகிக்கவும், குறைக்கவும் விரிவான, பன்முக முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. உடல்நலம், ஊட்டச்சத்து, உடல் செயல்பாடு, உணவு பாதுகாப்பு, வாழ்க்கை முறை மாற்றங்களை ஒருங்கிணைக்கும் ஒரு முழுமையான அணுகுமுறை ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான நடைமுறைகள் பல அமைச்சகங்களால் உத்தி ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

உடல் பருமன் இந்தியாவில் ஒரு அழுத்தமான பொது சுகாதார சவாலாக உள்ளது. ஆனால் நாடு அதை ஒரு விரிவான, பல துறை அணுகுமுறை மூலம் தீவிரமாக எதிர்கொள்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய அரசு சுகாதாரம், ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, ஒழுங்குமுறை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் உத்திசார் நடைமுறைகளைத் தொடங்கியுள்ளது.  உடல் பருமன் போக்குகளை மாற்றியமைக்கவும் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்கவும் நாடு நன்கு தயாராக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2107179

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2105618&reg=3&lang=1

https://www.who.int/health-topics/obesity#tab=tab_1

https://www.who.int/europe/news-room/fact-sheets/item/a-healthy-lifestyle---who-recommendations#:~:text=Note.,osteoarthritis%2C%20some%20cancers%20and%20diabetes. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1823047

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/1712/AU3780.pdf?source=pqals

https://ncdc.mohfw.gov.in/wp-content/uploads/2024/11/Obesity-English.pdf

https://mohfw.gov.in/sites/default/files/NP-NCD%20Operational%20Guidelines_0.pdf

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812388

https://sansad.in/getFile/annex/267/AU168_aJuwFy.pdf?source=pqars

https://x.com/moayush/status/1771778688310210809/photo/1

https://www.mygov.in/campaigns/poshan-abhiyaan-2024/

https://x.com/PIBWCD/status/1702599507563946219

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1910409

https://fitindia.gov.in/

https://fitindia.gov.in/fit-india-school-registration

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105644

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2085581

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078544

https://x.com/kheloindia/header_photo

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740750

https://eatrightindia.gov.in/eri-initiatives.jsp

https://foodsafetystandard.in/eat-right-india/

https://eatrightindia.gov.in/eri-initiatives.jsp

https://foodsafetystandard.in/eat-right-india/

https://www.fssai.gov.in/book-details.php?bkid=363

https://www.fssai.gov.in/book-details.php?bkid=346

https://eatrightindia.gov.in/eatrightschool/assets/resource/file/fs_magicbox.pdf

https://eatrightindia.gov.in/EatRightIndia/images/gallery/books/aaj_se_thoda_kam.jpg

https://westregion.fssai.gov.in/RUCO.php

https://eatrightindia.gov.in/ruco/

***

PLM/KV

 

 


(Release ID: 2107219) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi , Gujarati