மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேர்வுக்குத் தயாராவோம் 2025- இன் 7வது பகுதியில் எம் சி மேரி கோம், அவனி லெக்காரா, சுஹாஸ் எத்திராஜ் பங்கேற்றனர்

Posted On: 17 FEB 2025 3:57PM by PIB Chennai

தேர்வுக்குத் தயாராவோம் 2025 -இன் தொடக்க பகுதியில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் நுண்ணறிவு கலந்த விவாதங்களைத் தொடர்ந்து, அதன்  ஏழாவது பகுதி இன்று ஒளிபரப்பப்பட்டது. இதில் விளையாட்டு வீரர்களான எம் சி மேரி கோம், அவனி லெக்காரா, சுஹாஸ் எத்திராஜ் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் இலக்கை நிர்ணயித்தல், மீள்தன்மை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் மன அழுத்தத்தை எதிர்கொள்ளுதல் குறித்து பேசினார்கள். அவர்கள் தங்களது  வாழ்க்கையில் தனிப்பட்ட நிகழ்வுகளையும், விளையாட்டிலிருந்து கற்றுக்கொண்டவற்றையும் பகிர்ந்து கொண்டனர்.

குத்துச்சண்டையானது மகளிருக்கான விளையாட்டு அல்ல என்ற வழக்கமான நம்பிக்கையைத் தான் எப்படி மீறினேன் என்பது பற்றி மேரி கோம் பேசினார். சமூகத்தின் பார்வையை தனக்கு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள பெண்களுக்காவும் தான் சவாலாக எடுத்துக் கொண்டதாக அவர் தெரிவித்தார். மகள், மனைவி மற்றும் தாயாக தனது 20 ஆண்டுகாலப் பயணத்தை அவர் எடுத்துரைத்தார். கடின உழைப்பின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார், 

அச்சம் போன்ற எதிர்மறை எண்ணங்களை வெற்றிகொள்ள மனதின் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்று சுஹாஸ் எத்திராஜ் மாணவர்களை ஊக்குவித்தார். அச்சத்தை வெல்வதே இயற்கையாகச் செயல்படுவதற்கும், சிறந்து விளங்குவதற்கும் ஒரே வழி என்று அவர் வலியுறுத்தினார். "சூரியனைப் போல பிரகாசிக்க, சூரியனைப் போல எரியத் தயாராக இருக்க வேண்டும்" என்று அவர் சுட்டிக்காட்டினார். சவால்களை உறுதியுடனும், தீர்க்கத்துடனும் ஏற்றுக்கொள்ளுமாறு மாணவர்களை வலியுறுத்தினார்.

திறன்  மேம்பாட்டின் முக்கியத்துவத்தை அவனி லெக்காரா சுட்டிக் காட்டினார். முறையான திறன்களைப் பெறுவது எப்படி நம்பிக்கையை வளர்க்கிறது மற்றும் அச்சத்தைப் போக்குகிறது என்பது குறித்து விளக்கினார். தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் மாணவர்களுக்கு அவர் வழிகாட்டினார்.

இந்த அமர்வின் போது, வேலை வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தல் குறித்து பெற்றோரை சமாதானப்படுத்துதல், சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக்கொள்ளுதல், கவனத்துடன் இருத்தல் போன்றவை தொடர்பாக மாணவர்கள் கேள்விகளை எழுப்பினர். துபாய், கத்தாரைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்று, விருந்தினர்களுடன் தங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொண்டனர்.

முதல் பகுதியை காண்பதற்கான இணைப்பு:

https://www.youtube.com/watch?v=G5UhdwmEEls

2-வது பகுதியை காண்பதற்கான இணைப்பு:

https://www.youtube.com/watch?v=DrW4c_ttmew

3-வது பகுதியை காண்பதற்கான இணைப்பு:

  https://www.youtube.com/watch?v=wgMzmDYShXw

4-வது பகுதியை காண்பதற்கான இணைப்பு:

https://www.youtube.com/watch?v=3CfR4-5v5mk

5-வது பகுதியை காண்பதற்கான இணைப்பு:

https://www.youtube.com/watch?v=3GD_SrxsAx8

6-வது பகுதியை காண்பதற்கான இணைப்பு:

https://www.youtube.com/watch?v=uhI6UbZJgEQ

7-வது பகுதியை காண்பதற்கான இணைப்பு:

https://www.youtube.com/watch?v=y9Zg7B_o8So

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104072

*****

 

TS/IR/KV/KR

 


(Release ID: 2104128) Visitor Counter : 29