நிதி அமைச்சகம்
2024-25 பொருளாதார ஆய்வறிக்கையின் சில முக்கிய அம்சங்கள்
Posted On:
31 JAN 2025 2:23PM by PIB Chennai
மத்திய நிதியமைச்சர் திரு நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.
அதன் முக்கிய அம்சங்கள் சில:
- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2026-ம் நிதியாண்டில் 6.3 முதல் 6.8 சதவீதத்திற்கு இடையில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- 2025-ம் நிதியாண்டில் உண்மையான ஜிடிபி 6.4 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- 2025-ம் நிதியாண்டில் உண்மையான ஜிவிஏ 6.4 சதவீதம் வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது
- கேபெக்ஸ் ஜூலை - நவம்பர் 2024-ல் 8.2 சதவிகிதம் வளர்ச்சியடைந்து. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஏப்ரல்-டிசம்பர் 2024-ல் சில்லறை விலை பணவீக்கம் 4.9 சதவீதமாக குறைந்தது.
- இந்தியாவின் நுகர்வோர் விலை பணவீக்கம் 2026-ம் நிதியாண்டில் சுமார் 4 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.
- ஏப்ரல்-டிசம்பர் 2024-ல் ஒட்டுமொத்த ஏற்றுமதிகள் 6.0 சதவீதம் வளர்ச்சியடையும்.
- இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி வளர்ச்சி 2025 ஏப்ரல்-நவம்பர் காலத்தில் 12.8 சதவீதமாக உயர்ந்தது, இது 2024-ல் 5.7 சதவீதமாக இருந்தது
- 2024-ம் நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் அன்னிய நேரடி முதலீடு 47.2 பில்லியன் டாலராக இருந்தது. இது 2025-ம் நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 55.6 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது 17.9 சதவீத ஆண்டு வளர்ச்சியாகும்.
- 2025-ம் நிதியாண்டில் விவசாயம் 3.8 சதவிகிதம் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2025-ம் நிதியாண்டில் தொழில்துறை 6.2 சதவீதம் வளர்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- வேலையின்மை விகிதம் 2023-24-ல் 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097921
***
PLM/RJ/DL
(Release ID: 2098290)
Visitor Counter : 21