பிரதமர் அலுவலகம்
கூட்டு முயற்சிகளுக்கு நன்றி. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை காலப்போக்கில் அதிகரித்து வருகிறது: பிரதமர்
Posted On:
03 DEC 2024 7:10PM by PIB Chennai
புலிகளைப் பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை காலப்போக்கில் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டார். இந்தியாவில் கூடுதலாக 57-வது புலிகள் சரணாலயம் அமைக்கப்படுவது இயற்கையை நேசிக்கும் நமது பல நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளுக்கு ஏற்ப உள்ளது என்று அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவின் சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவுக்கு பதில் அளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
“இயற்கையைப் பராமரிப்பதற்கான நமது பல நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளுக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஒரு அற்புதமான செய்தி. கூட்டு முயற்சிகளுக்கு நன்றி, இந்தியாவின் புலிகளின் எண்ணிக்கை காலப்போக்கில் அதிகரித்து வருகிறது, இந்த உணர்வு வரும் காலங்களில் தொடரும் என்று நான் நம்புகிறேன்”.
-----
IR/KPG/DL
(Release ID: 2080353)
Visitor Counter : 20