பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் இந்திய ராணுவத்தினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்
விருந்தோம்பல் இல்லாத இடங்களில் உறுதியாக நின்று நம்மைப் பாதுகாக்கும் நமது பாதுகாப்புப் பணியாளர்களை நினைத்து நாம் மிகவும் பெருமைப்படுகிறோம்: பிரதமர்
Posted On:
31 OCT 2024 7:20PM by PIB Chennai
குஜராத் மாநிலம் கட்ச் கழிமுகப் பகுதியில் உள்ள லக்கி நாலாவில் எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த துணிச்சல் மிக்க வீரர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.
விருந்தோம்பல் இல்லாத இடங்களில் உறுதியாக நின்று நம்மைப் பாதுகாக்கும் நமது பாதுகாப்புப் படையினர் குறித்து நாம் மிகவும் பெருமை கொள்கிறோம் என்று பிரதமர் கூறினார். கட்ச் கழிமுகப் பகுதி அதிக வெப்பநிலை காரணமாக சவாலானதாகவும், தொலைதூரமாகவும் உள்ளது. இது மற்ற சுற்றுச்சூழல் சவால்களையும் கொண்டுள்ளது என்று பிரதமர் மேலும் கூறினார்.
கழிமுகப் பகுதியில் மிதக்கும் எல்லை புறக்காவல் முகாம் ஒன்றிற்குச் சென்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, துணிச்சல் மிக்க பாதுகாப்புப் படையினருடன் இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"குஜராத்தின் கட்ச் பகுதியில் நமது துணிச்சல் மிக்க ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினேன்.
விருந்தோம்பல் இல்லாத இடங்களில் நமது பாதுகாப்புப் படையினர் உறுதியாக நின்று நம்மைப் பாதுகாக்கிறார்கள். அவர்களை நினைத்து நாம் மிகவும் பெருமைப்படுகிறோம்.
எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த துணிச்சல் மிக்க வீரர்களுடன் கட்ச் கழிமுகப் பகுதியிலுள்ள லக்கி நாலாவில் தீபாவளியைக் கொண்டாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பகுதி சவாலானது மற்றும் தொலைதூரமானது. பகல் வெயில் சுட்டெரிப்பதுடன் குளிரும் அதிகமாகிறது. கழிமுகப் பகுதியில் பிற சுற்றுச்சூழல் சவால்களும் உள்ளன.
கழிமுகப் பகுதியில் மிதக்கும் எல்லை புறக்காவல் முகாம் ஒன்றிற்குச் சென்று நமது துணிச்சல் மிக்க பாதுகாப்புப் பணியாளர்களுடன் இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டோம்."
***
SMB/DL
(Release ID: 2069906)
Visitor Counter : 9